கற்பிட்டி மஹ்தி பவுன்டேஷன் உச்சிமுனை தேவாலயத்திற்கு கதிரைகள் வழங்கி வைப்பு..!
கற்பிட்டி பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் மஹ்திய பவுன்டேஷன் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலினால் உச்சமுனை கத்தோலிக்க தேவாலயத்திற்கு ஒரு தொகை பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தலைமை வேட்பாளராக பள்ளியாவத்தை வட்டாரத்தில் முதன் முறையாக மஹ்தி பவுன்டேஷன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் போட்டியிட்டார்.
இவர் கடந்த 22 வருடமாக இதே வட்டாரத்தில் பல்வேறு கட்சிகளுக்கும் தாவி வளம் வந்து கொண்டிருந்தவரும்இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட முன்னாள் உறுப்பினரை தோற்கடித்து வரலாறு படைத்து வெற்றி பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏ.ஆர்.எம் முஸம்மிலை வரவேற்க்கும் முகமாக உச்சமுனை மீனவ மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தின் போது உச்சமுனை கத்தோலிக்க தேவாலயத்திற்கு மஹ்தி பவுன்டேஷன் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலினால் தேவாலயத்தின் பங்குதந்தையிடம் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)



