மஜ்மாநகர் எதிர்நோக்கி வரும் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்குமா?
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசெளகரியங்களஒலியும் இன்னல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதே வேளை, நேற்று தரசேனை பிரதேச வீதியிலுள்ள மின்சாரக்கம்பத்தை கூட சாய்ந்துள்ளதுடன், யானையின் அச்சுறுத்தல் காரானமாக இப்பகுதியில் போக்குவரத்து செய்வதற்கும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
யானைகளின் அட்டகாசத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் நிரந்தரத்தீர்வைப் பெற்றுத்தர உரிய அதிகாரிகளும் மாவட்ட அரசியல்வாதிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.