“90 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுசிறப்புமிக்க சவுதி – அமெரிக்க உறவு”
“வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் இரு தவைர்களது சந்திப்பும், ஒப்பந்தங்களும் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியதொன்றாகும்”

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு சவுதி அரேபியாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். சவுதி அரேபியாவுக்கான அவரது வரலாற்று சிறப்புமிக்க பயணம் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. ரியாத்தை வந்தடைந்த ஜனாதிபதி ட்ரம்பை சவுதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இளவரசர் தலைமையில் ட்ரம்புக்கு செங்கம்கள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ட்ரம்பின் சவுதிக்கான விஜயத்தின் ஊடாக இடம்பெற்ற சந்திப்பு வெறுமனே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சாதாரண சந்திப்பல்ல. மாறாக சவுதியின் தலைமைத்துவத்திற்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமும் சர்வதேச அரங்கில் கிடைக்கப்பெற்ற சிறந்ததொரு வாய்ப்பும் ஆகும்.
பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானை “ஒரு சிறந்த மற்றும் இணையற்ற மனிதர்” என்று ஜனாதிபதி டிரம்ப் சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். பட்டத்து இளவரசர் சிறந்த தலைவர் என்பதற்கு கிடைத்துள்ள ஒரு உண்மையான சான்று இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புச் செய்திகளைக் கொண்டுள்ளது. இது, எதிர்காலத்தை வழிநடத்தவும் இளம் தலைமைத்துவத்தை உருவாக்கவும் பாடுபடும் இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் தொலைநோக்குப் பார்வை மற்றும் இலட்சியத் தலைமைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் வேண்டுகோளுக்கிணங்க பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் தலைமையில் ரியாத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை சந்தித்ததும் சிரியா மீதான பொருளாதாரத் தடையை நீக்கியதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படக்கூடிய நிகழ்வாகும். இதற்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆவர். இளவரசரின் வேண்டுகோளுக்கு அமைய சிரியாவின் பொருளதாரத் தடையை நீக்குவதாக ட்ரம்ப் அறிவித்திருப்பது சவுதிக்கும் இளவரசரருக்கும் கிடைக்கப்பெற்றுள்ள மாபெரும் கௌரவமுமாகும்.

பட்டத்து இளவரசர் மற்றும் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் சவுதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவைகளாவன,
- சுரங்கம் மற்றும் கனிம வளங்கள்: சவுதி கைத்தொழில் அமைச்சுக்கும் அமெரிக்க எரிசக்தித் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு.
- பாதுகாப்பு மற்றும் பயிற்சி: தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கான வெடிமருந்துகள், பயிற்சி, பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தல்.
- பாதுகாப்பு மற்றும் விசாரணைகள்: சவுதி உள்துறை அமைச்சுக்கும் எஃப்.பி.ஐ.க்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இராணுவ சுகாதாரம்: ஆயுதப்படைகளின் சுகாதாரத் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.
- நீதித்துறை: இரு நாடுகளதும் நீதி அமைச்சுகளுக்கு இடையிலான நீதித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- விண்வெளி: சவுதி விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா இடையே ஒப்பந்தம்.
- சுங்கம்: இரு நாடுகளின் சுங்க நிர்வாகங்களுக்கு இடையேயான பரஸ்பர உதவி ஒப்பந்தம்.
- விமானப் போக்குவரத்து: இரு அரசாங்கங்களுக்கிடையிலான விமானப் போக்குவரத்து ஒப்பந்த விதிகளில் திருத்தம்.

இந்த நிலையில் பட்டத்து இளவரசரைப் பற்றி ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இளவரசர் முஹம்மத் பின் சல்மான், ஒரு சிறந்த மற்றும் ஒப்பிட முடியாத மனிதர். உலகின் மிகவும் வளமான நாடுகளில் அவர் தலைசிறந்ததொரு தலைவராக விளங்குகிறார். நாட்டுக்காகக் கடினமாக உழைக்கின்ற அவர் இரவில் தூங்குவதாக நான் நினைக்கவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமையின் கீழ், சவுதி குறிப்பிடத்தக்க மற்றும் நேர்மறையான மாற்றத்தைக் காண்கிறது. குறிப்பாக இளவரசர் முஹம்மத் மூலம் ரியாத் ஒரு உலகளாவிய வணிக அதிகாரம் மிக்க மையமாக மாறுகிறது. அத்தோடு இவர் ஊடாக மத்திய கிழக்கின் சிறந்த எதிர்காலம் இப்போது ஆரம்பமாகிறது.
மேலும் இளவரசர் முஹம்மத் மூலம் இப்பிராந்தியம் ஒரு நவீன அரபு அதிசயத்தைக் காண்பதோடு தனது நாட்டு மக்களாலும் பிராந்திய மக்களாலும் மிகவும் நேசிக்கப்படக்கூடிய ஒருவராக இளவரசர் திகழ்கிறார்.
அமெரிக்காவுக்கும் சவுதிக்கும் இடையில் 300 பில்லியன் டொலர் மதிப்புள்ள 145 முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சார்திடப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் சவுதியை உண்மையான வல்லரசாக மாற்றும். சவுதி அரேபியா தற்போது சென்று கொண்டிருக்கும் இந்த வேகத்தில் தொடர்ந்தால், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் அது உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் மாறும்.
வரலாற்று சிறப்புமிக்க இச்சந்தர்ப்பத்தில் பலஸ்தீன மக்களுக்கு மிக விரைவில் தீர்வைப்பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இளவரசர் வலியுறுத்தியுள்ளார்.
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க தலைவர்களது வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பும் பொருளாதார ஒப்பந்தங்களும் நிச்சயமாக இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் 2030 தூர நோக்குச் சிந்தனையை மென்மேலும் வெற்றிகரமானதாக வலுப்படுத்தும் என உறுதிபடக்கூறலாம்.

எம்.எச்.ஷைஹுத்தீன் (BA) மதனி,
பணிப்பாளர், அல்ஹிக்மா நிறுவனம், கொழும்பு