கட்டார் வந்த ட்ரம்புக்கு மகத்தான வரவேற்பு; 200 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் கைச்சாத்து
சவுதி அரேபிய விஜயத்தை நிறைவு செய்து கட்டாருக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தலைமையில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின் இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். அமெரிக்காவிலிருந்து 160 விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.