நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டால் 122 உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்; ஜனாதிபதி அநுர
இந்த வருட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலோடு ஓப்பிட்டால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் 122 ஆசனங்கள் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார்.
இந்த ஒப்பீடு நியாயமற்றது எனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஆணையை இழந்துவிட்டதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, கொழும்பு விஹார மகாதேவி திரையரங்கில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 4,530,930 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் அறிவிக்கப்பட்ட வாக்குகளில் 43.26% வீதத்தைப் பதிவு செய்துள்ளது.