வளைகுடா ஒத்துழைப்பு மாநாட்டில் ட்ரம்ப் இன்று விஷேட உரை
சவூதி அரேபியாவில் இன்று நடைபெறவுள்ள வளைகுடா ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விஷேட உரையாற்றவுள்ளார்.
இம் மாநாட்டில் பலஸ்தீன்,காஸா மற்றும் மத்திய கிழக்கு தொடர்பான பல்வேறு முடிவுகளை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம் மாநாட்டில் சவூதி அரேபியா, குவைத்,ஒமான், ஐக்கிய அரபு குடியரசு, பஹ்ரைன், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.