ரம்பாவ வீதி விபத்தில் இருவர் காயம்
பரசன்கஸ்வெவ பொலிஸ் பகுதியில் ரம்பாவ வீதியில் 09 வது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ரம்பாவ பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேன் ஒன்று கடையொன்றின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி மின் கம்பத்துடன் மோதியுள்ளதுடன் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து குருநாகல் பகுதிக்கு செல்தற்காக ரம்பாவ வீதி ஊடாக அனுராதபுரம் நோக்கி பயணித்த வேன் ஒன்றின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்திற்கு ப்ளாகில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் தாயும் மகனும் காயமடைந்துள்ள நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)