இலங்கை உயர் நீதிமன்றின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் கல்பிட்டியை சேர்ந்த அப்ரா ஹுசைன்
கல்பிட்டியை சேர்ந்த அப்துல் ஹுசைன் மற்றும் சித்தி நஸ்ரியா (சமுர்த்தி உத்தியோகத்தர்) தம்பதிகளின் புதல்வியான பாத்திமா அப்ரா இன்று (14.05.2025) உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்று, 2018ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் 3A சித்தியை பெற்று புத்தள மாவட்டத்தில் 4ஆவது இடத்தை பெற்றதுடன் கொழும்பு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி அங்கு சட்ட பீடத்தில் சட்டப்படிப்பினை நிறைவு செய்து சட்ட இளமானி பட்டத்தையும் (LL.B Hon’s) பெற்றுள்ளார்.


(ரிஷ்வி ஹூசைன்- கல்பிட்டி)