இந்து, பாகிஸ்தான் மோதலை நானே நிறுத்தினேன்; தனது கருத்தை மீண்டும் நிறுவிய ட்ரம்ப்
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பயங்கர மோதலாக உருவெடுக்க இருந்த சண்டையை தானே நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நான் யுத்தத்துக்கு எதிரானவன்.வர்த்தக முயற்சிகளைக் கருத்திற் கொண்டே இரு நாட்டுத் தலைவர்களுடன் பேசி மோதலை நிறுத்தினேன்.நாடுகளுக்கிடையே மோதல்களை நிறுத்தி உலகளாவிய வர்த்தக முயற்சிகளை ஊக்குவிப்பதே தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.