அமெரிக்க, சவூதிக்கிடையில் பாரிய வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்காவில் 600 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டொனால்ட் ரம்ப் மற்றும் முகமது பின் சல்மான் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இவ்ஒப்பந்தத்தின் படி அதி நவீன போர் விமானங்கள், வானிலே தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பிற தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாட்டுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வரலாற்று சிறப்பு மிக்க மிகப்பெரிய ஒப்பந்தம் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது.