ஹமாஸின் பிடியிலிருந்த அமெரிக்க கைதி விடுதலை..!
கடந்த 2023 ஓக். 7-ஆம் திகதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினா் நேற்று திங்கட்கிழமை விடுவித்தனா்.
சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் அவா் ஒப்படைக்கப்பட்டதாகவும், கிஸுஃபும் எல்லை வழியாக காஸாவில் இருந்து அவா் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ரொய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஹமாஸிடம் பிணைக் கைதியாக இருந்த கடைசி அமெரிக்க-இஸ்ரேலியா் ஈடன் அலெக்ஸாண்டா் என்பது குறிப்பிடத்தக்கது.