புத்தளம் சமூக சேவையாளர் “எம்.ஜி.ஆர்” செல்வராஜா இறை பதம் அடைந்தார்
புத்தளம் நகரின் சிறந்ததொரு சமூக சேவையாளர் கதிரவவேல் செல்வராஜா ஆசாரி அவர்கள் தனது 77 வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை புத்தளம் நகரில் இறை பதம் அடைந்தார்.
மறைந்த செல்வராஜா அவர்கள் புத்தளம் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவராகவும், புத்தளம் கலைஞர் ஒன்றிய தலைவராகவும் கடமையாற்றியவர்.
இன மத வேறுபாடின்றி குறிப்பாக முஸ்லிம் மக்களோடு அன்னியோன்யமாக பழக கூடிய ஒருவர். எழுத்துலகுக்கு நீண்ட காலமாக பங்களிப்பு நல்கியவர்.
இவர்ழ பிரசன்னமாகாத நூல் வெளியீட்டு வைபவங்கள் புத்தளம் நகரில் நடந்தேறியதில்லை.
மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்த இவர், அவருக்கு புத்தளத்தில் மன்றத்தையும் தோற்றுவித்து எம்.ஜி.ஆர் போலவே எந்நேரமும் தொப்பி அணிந்திருப்பவர். இதனால்தான் என்னவோ அவரது பூதவுடலுக்கும், எம்.ஜி.ஆரை நேசிக்கும் அடையாள சின்னமாக அவர் எந்நேரமும் அணிந்திருக்கும் தொப்பி அணிவிக்கப்பட்டிருந்து.
பழைய பாடல்களின் அலாதி பிரியரான இவர் புத்தளம் நகரில் எம்.ஜி.ஆர்.என்றே பெயர் கூறி அழைக்கப்பட்டவர்.
புத்தளம் தில்லையடி ஐயனார் ஆலயத்தின் வளர்ச்சிக்காக நீண்ட காலம் தொண்டாற்றியவர்.
அன்னாரது பூதவுடல் திங்கட்கிழமை (12) மாலை புத்தளம் தில்லையடி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)