கட்டார் நாட்டிற்கான முன்னாள் இலங்கை தூதுவரான சட்டத்தரணி ஏ.எல்.எம்.யூசுப் காலமானார்..!
மாவனல்லை அங்வாரத்தைச் சேர்ந்த கட்டார் நாட்டிற்கான முன்னாள் இலங்கை தூதுவரான சட்டத்தரணி ஏ.எல்.எம்.யூசுப் அவர்கள் தனது 91 ஆவது வயதில் காலமானார்.
மாவனல்லை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளி வாசல் பரிபாலன சபை உட்பட பல சமூக சேவை பணி செய்த இவர் வறிய மாணவர்களின் கல்வி பணிக்காக மாதாந்த நிதி ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளார். மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி ,சாஹிரா தேசிய கல்லூரி,மயுரபாத தேசிய கல்லூரி என்பவற்றுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
சமூக சேவையாளரான இவர் பெரிஸ்டர் ஹாசிம் அவர்களின் சகோதரரும்,பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிமின் சித்தப்பாவும் ஆவார்.ஸீனா ,சுரையா ஆகிய இரு பெண் பிளாளைகளின் தந்தையான இவரின் ஜனாஸா 2025 மே மாதம் 11 ஆம் திகதி கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளி வாசல் மையவாடியில் மஃரிப் தொழுகையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்கள்)