காகித நகர் வட்டாரத்தில் மெளலவி லத்தீப் தெரிவு
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை பட்டியல் உறுப்பினர் காகித நகர் வட்டாரத்தின் வேட்பாளர் அல்ஹாபிழ் மெளலவி எஸ்.எம்.ஏ.லத்தீப் தெரிவுசெய்யப்ட்டார்.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபைக்காக போட்டியிட்ட வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தி வட்டாரத்தின் ஊடாக ஒருவரும் பட்டியல் ஊடாக ஒருவருமாக இரண்டு ஆசனங்களை கைப்பற்றியது.
அதனடிப்படையில் நேரடியாக வெற்றி பெற்ற ஆசனம் வாகனேரி வட்டாரத்திற்கு கிடைக்கப் பெற்றதுடன், குறித்த சபைக்கான முஸ்லிம் வட்டாரங்களில் அதிகளவாக 337 வாக்குகளைப் பெற்ற காகித நகர் வட்டார வேட்பாளரான
அல்ஹாபிழ் மெளலவி எஸ்.எம்.ஏ. லத்தீப் பட்டியல் ஆசனம் ஊடாக பிரதேச சபை உறுப்பினராவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியையும் கொள்கையையும் நம்பி ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் வாக்களித்த அனைவருக்கும் அல்ஹாபிழ் மெளலவி எஸ்.எம்.ஏ.லத்தீப் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)