புத்தளத்தில் நடைபெற்ற புதுயுகம் உருவாக்கும் விழிப்புணர்வு செயலமர்வு
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு, புத்தளம் கல்வியலாளர்களின் சங்கம் நவிகாய்ஸ் அமைப்பு மற்றும் தனிப்பட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பியூசர் லீடர்ஸ் ஃபோரம் மூலம் 11ம் திகதி காலை 8.30 மணியளவில் ஸாஹிரா தேசியக் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் தமிழ் மொழி மூலமான இலங்கை நிர்வாக சேவை போட்டித் தேர்வுகள் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.
இந்த நிகழ்வின் வளவாளர்களாக நீர் வளங்கள் மற்றும் உள்நாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு.ஏ.சீ.எம்.நபீல், மாஹோ கல்வி வளையத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். ஏ. எம். ரிஸ்வி, தற்பொழுது இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தகுதி பெற்றிருக்கும் பிரபல ஆசிரியர் சிராஜ் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக நாடளாவிய ரீதியில் நடைபெறும் இலங்கை நிர்வாக சேவைகள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வின் முக்கியமான திட்டமிடல் குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான திரு.வை.ஐ.எம்.ஹனீஸ், புத்தளம் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. அஸ்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதன் நிகழ்வின் வரவேற்புரையை ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவர் , வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் புத்தளம் கல்வியலாளர்களின் சங்கத்தின் தலைவர் ஏ.ஜே.எம். இல்ஹாமும், விஷேட சொற்பொழிவினை புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரும் பிரபல ஊக்குவிப்பு பேச்சாளரும் தொழில் வழிகாட்டல் ஆலோசகர்மான எம்.ஆர்.எம்.ஷவ்வாப் வழங்கியதோடு இந்த நிகழ்விற்கான நன்றியுரையை இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ஒருவர் மற்றும் பிரபல நிதி முகாமையாளர் மஹ்தி ஹஸன் வழங்கியதோடு கல்பிட்டி அல் – அக்ஸா தேசிய பாடசாலையின் ஆசிரியரும் ஏற்பாட்டுக் குழுவின் முக்கியமான ஒருவரும் ஆகிய ரபீத் இந்த நிகழ்வுகள் யாவும் சிறப்பாய் முடிவடைய மும்முறமாக செயல்பட்டார்.
இந்த நிகழ்வுக்கு பல முக்கியஸ்தர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் இந்த நிகழ்வின் பங்குதாரர்களாக கலந்து கொண்டார்கள். அதேபோல இன்றைய நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஏற்பாட்டு குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.





