கம்பளை ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்த பிரதமர் ஹரிணி
இறம்பொடை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு சென்று நலன் விசாரித்துள்ளார் பிரதமர் ஹரிணி.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களின் வைத்தியத் தேவைகள் மற்றும் அனைத்து நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சையை எளிதாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இவர்களுடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதியமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன ஆகியோரும் சென்றுள்ளனர்.