புத்தளம் அ.இ.ஜ.உலமா மற்றும் புத்தளம் தள வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய ஆலிம்களுக்கான இலவச மருத்துவ முகாம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையும் புத்தளம் தள வைத்தியசாலையும் இணைந்து இன்று 10.05.2025 சனிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் காரியாலயத்தில் உலமாக்களுக்கான (ஆலிம்களுக்கு மட்டும்) இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் இலவச மருத்துவ முகாமில் நீரிழிவு, பிரஸர், கொலோஸ்ட்ரோல் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஊடகப்பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக்கிளை