போர் பதற்றம்; பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மிகுதி போட்டிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது .
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐ.பி.எல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்தும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ப் பதற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதோடு பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்றி, இந்தத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.