உள்நாடு

பேருவளை நகர சபைத் தேர்தல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களுக்கு மஸாஹிம் முகம்மத் நன்றி



நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேருவளை நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பேருவளை நகர சபை முன்னாள் நகரபிதா மஸாஹிம் முகம்மத் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.


பேருவளை மருதானை, கொரகதுவ, ஹெட்டியாகந்த மற்றும் பரணகடை ஆகிய நான்கு வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியை பெற்றி பெறச்செய்த மக்களுக்கும், மஹகொடை, மாளிகாஹேனை, கங்கானங்கொடை, சீனன் கோட்டை மற்றும் அக்கரகொடை வட்டாரங்களில் எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு உழைத்த, வாக்களித்த மக்களை என்றும் நாம் மறுக்க மாட்டோம். எனது கட்சி சார்பாக தெரிவான ஆறு உறுப்பினர்களில் சேவை என்றும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தி பேருவளைத் தொகுதி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் அவர்களின் வழிகாட்டலுடன் நகர சபைப் பகுதி வாழ் மக்களுக்கான சேவையை நாம் முன்னெடுப்போம்.
மருதானையில் என்னை தோற்கடிப்பதற்காக செய்த எல்லா சதி வேலைகளையும் இவ்வூர் மக்கள் முறியடித்தார்கள். அதற்காக விசேடமாக நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன் என்று மேலும் தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *