உள்நாடு

களுத்துறை மாநகரசபைக்கு மு.கா.சார்பில் மூன்று முஸ்லிம்கள் தெரிவு.


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
தலைமை வேட்பாளர் முன்னாள் நகர பிதா ஆமிர் நஸீர் உட்பட இன்னும் இரு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


களுத்துறை மஹவத்தை வட்டாரத்தில் போட்டியிட்ட ஆமிர் நஸீர் 985 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
குருந்துவத்தை(கருவாத்தோட்டம்) வட்டாரத்தில் போட்டியிட்ட ருசாத் நைஸர் 523 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டயதோடு, குடா ஹீனேட்டியன்கலை வட்டாரத்தில் போட்டியிட்ட அன்வர் ஸதாத் 712 வாக்குகளைப் பெற்று உறுப்பினரானார்.


களுத்துறை மாநகர சபைக்கு தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் முதல் தடவையாக மூன்று உறுப்பினர்களைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளதாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். நஸீர் ஹாஜியார் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த களுத்துறை வாழ் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக உறுப்பினராக தெரிவான ஆமிர் நஸீர் தெரிவித்தார்.


இன,மத, மொழி, கட்சி, பிரதேச வேறுபாடுகளின்றி களுத்துறை வாழ் மக்களுக்கு நாம் முடியமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *