அத்தனகலை பிரதேச சபை செல்லும் பிர்தெளஸ் ஹாஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு
அத்தனகல்ல தொகுதி கஹட்டோவிட்ட வட்டாரத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு கட்சி சார்பில் பிரதேச சபைக்கு செல்லவுள்ள அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025,கம்பஹா மாவட்டம் அத்தனகல்ல தேர்தல் தொகுதியி, கஹட்டோவிட்ட வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் (தராசு சின்னத்தில்) போட்டியிட்டு 1324 வாக்குகளை பெற்று கட்கிக்கு கிடைத்துள்ள இரண்டு உறுப்பினர் பதவிகளில் ஒரு வாய்ப்பை பெற்று பிரதேச சபைக்கு செல்லவுள்ளார்.
இதனை முன்னிட்டு அண்மையில் 7/5/2025 அன்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தனக்கு வாக்களித்த,வாக்களிக்காத அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தராசு சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல் ஹாஜ் ரவுப் ஹக்கீம் மற்றும் கட்சியின் அமைப்பாளர் முஸ்தாக் மதனி அவர்களுக்கும்,தன்னோடு போட்டியிட்ட சக வேட்பாளர்களுக்கும்,இரவு பகல் பாராமல் தனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதன் பிறகும் தான் தொடர்ந்து செய்து வந்த சமூக பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும், பிரதேச சபை ஒதுக்கீடு மற்றும் அரச நிதியுதவிகள் , அரச சார்பற்ற நிறுவனங்கள், தனவந்தர்கள்,நலன் விரும்பிகள் வழங்கும் நன்கொடைகள் உதவியில் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சேவைகளை தான் எவ்வித பாகுபாடும் இல்லாமல் செய்வேன் என்றும் உறுதியளித்தார்.