உள்நாடு

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடிய பேருவளை சுயேட்சைக் குழு..!

பேருவளை நகரசபை தேர்தலில் ஏழு ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற சுயேட்சைக்குழு (மோட்டார் சைக்கில் சின்னம்) தமது வெற்றியை கேக் வெட்டி மிக அமைதியான முறையில் கொண்டாடினர்.
சீனங்கோட்டை பெரேரா வீதியில் உள்ள சுயேற்சை குழு தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற இவ் வைபவத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தலைமைவகித்தார்.
அக்கரகொடை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலைமை வேட்பாளர் அஸாம் பளீல, சீனன் கோட்டை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இஷாக் மர்ஜான் உட்பட ஏனைய வட்டாரங்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் பெருமளவிலான ஆதரவாளர்கள் நிகழ்வு பங்குபற்றியதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
மோட்டார் சைக்கில் வடிவிலான பாரிய கேக் தயாரிக்கப்பட்டதோடு அதனை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் வெளிக்காட்டினர்.
சுயேற்சைக்குழுவின் வெற்றிக்காக வாக்களித்த, இரவு பகல் பாராது பாடுபட்ட அனைவருக்கும் இதன் போது முன்னால் எம்.பி மர்ஜான் பளீல் நன்றி தெரிவித்தார். போலிப்பிரச்சாரங்களை தூக்கி வீசி எம் மீது மக்கள் பூரண நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி எதிர்காலத்தில் சிறப்பான சேவைகளை முன்னெடுப்போம் என்றார்.
நீதியாகவும் நேர்மையாகவும் எவ்வித வேறுபாடுகளுமின்றி பேருவளை மக்களுக்கு உச்ச சேவைகளை நகர சபையினூடாக பெற்றுக்கொடுப்போம். ஏன தலைமை வேட்பாளர் அஸாம் பளீல் மற்றும் இஷாக் மர்ஜான் ஆகியோர் இங்கு குறிப்பிட்டார்.
முன்னால் எம்.பி. மர்ஜான் பளீல், முன்னால் நகர பிதா மில்பர்கபூர் ஆகியோரின் வழிகாட்டலுடன் மக்களுக்கான பணி செவ்வனே முன்னெடுக்கப்படும் என்ம் எமது வேலைத்திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ள மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று அஸாம் பளீல் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *