விமானப் படை ஹெலி விபத்தில் ஐவர் பலி..!
விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் இன்று (09) காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, அதில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விமானப்படை ஹெலிகாப்டர் ஊழியர்கள் இருவரும், இராணுவ சிறப்புப் படை வீரர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.