பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் ஐ.பி.எல்.போட்டிகள் இடைநிறுத்தம்..!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதல்களை தொடர்ந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடைபெறும் திகதி மற்றும் இடங்கள் தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
