கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்..! ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை..!
கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்க விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் அந்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் முறையாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இந்த ஒட்டுமொத்த சம்பவத்திவலும் ஏதாவதொரு தரப்பு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார்களா என்பது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு அமைச்சினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.