ஒலுகஸ்கட விபத்தில் ஒருவர் பலி..!
ஹொரவப்பொத்தானை ஒலுகஸ்கட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் படுகாயமடைந்த நிலையில் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம்)