மத்திய நுவரகம் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி வென்றது..!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் மத்திய நுவரகம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
மத்திய நுவரகம் பிரதேச சபையின் 16 வட்டாரங்களில் 15 வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளதுடன் கம்பிரிகஸ்வெவ வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மத்திய நுவரகம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 19.665 வாக்குகளைப் பெற்று 15 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 8.606 வாக்குகளைப் பெற்று 06 உறுப்பினர்களையும் சீ லங்கா பொதுஜன பெரமுன 4023 வாக்குகளைப் பெற்று 03 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய கட்சி 3573 வாக்குகளைப் பெற்று 02 உறுப்பினர்களையும் பொதுஜன எக்சத் பெரமுன 2263 வாக்குகளைப் பெற்று 01 உறுப்பினரையும் விகிதாசார அடிப்படையில் பெற்றுள்ளது.
மத்திய நுவரகம் பிரதேச சபை தேர்தலில் 62582 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 40610 வாக்குகள் அழிக்கப்பட்டதுடன் 39869 வாக்குகள் செல்லுபடி வாக்குகளும் 741 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாகவும் பதிவாகியிருந்தன .
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)