உள்நாடு

இன்றும், நாளையும் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் மீண்டும் கூடுகின்றது. அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பான பிரேரணை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

பின்னர், மாலை 5 மணிக்கு, சபை ஒத்திவைப்பு நேரத்தில் எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை விவாதிக்கப்படும்.

இதே நேரத்தில், ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த 6 தனிநபர் பிரேரணைகள் நாளை விவாதத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *