வங்கிகள் இன்று 11.00 மணிக்கு மூடப்படும்.
நாடு முழுவதும் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுகின்றமையினால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படுமென இலங்கை வங்கி சேவை சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரண்டரை மணிநேரம் திறந்து வைக்கப்படுமென அந்தச் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
நாளையிலிருந்து (07) வங்கி சேவைகள் மீண்டும் வழைபோல் இடம்பெறும்.