கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.