மூவகை கிரிக்கெட் தொடரில் மோத இலங்கை வரும் பங்களாதேஷ்; போட்டி அட்டவணை வெளியீடு
பங்களாதேஷ் கிரிகெட் அணி சமீபத்தில் சிம்பாபேவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 1-1 சமனில் போட்டியில் இடம்பெற்றது. இதையடுத்து, பங்களாதேஷ் அணியானது இம்மாதம் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதன்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்த ரி20 தொடரானது எதிர்வரும் வரும் 25ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களை முடித்த கையோடு பங்களாதேஷ் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பங்களாதேஷ் அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது.
இதையடுத்து இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொழும்பு, பல்லகல, தம்புல்ல ஆகிய 4 மைதாங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடர் ஜுன் 17ஆம் திகதி முதல் ஜுலை 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
