உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா பள்ளியில் மனாகிப் ஆரம்ப நிகழ்வு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 134ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 08ஆம் திகதி (08.05.2025) வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகையின் பின்னர் கலீபத்துஷ் ஷாதுலிகளான அல் ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல்ஹஸன் (நளீமி) மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி), மௌலவி அல் ஹாஜ் எம்.எம். செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் தலைமையில் இடம்பெறும்.

சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர்ந்து 9 நாட்கள் மனாகிப் மஜ்லிஸ் இடம்பெறுவதோடு, 10 ஆம் நாள் தமாம் பெரிய கந்தூரி நடைபெறும் உலமாக்களினால் மார்க்க உபன்னியாசங்களும் நிகழ்த்தப்படும்.

ஆரம்ப நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச்செயலாளருமான கலீபத்துஷ் ஷாதுலிகளான அல் ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல்ஹஸன் (நளீமி) மனாகிப் முக்கியத்துவம் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றுவார்.

  1. இரண்டாம் நாள் மாத்தறை மின்னத்துல் பாஸிய்யா அரபிக் கல்லூரி அதிபர் கலீபத்துஷ்ஷாதுலி மௌலவி உஸ்தாத் எம்.எஸ்.எம். இஸ்திகார் (பாரி) ஷாதுலியா தரீகா இலங்கைக்கு வந்த வரலாறு என்ற தலைப்பிலும்
  2. மூன்றாம் நாள் கொழும்பு உம்மு ஸாவியா முஹம்மத் அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரி அதிபர் உஸ்தாத் மௌலவி எம்.எஸ்.எம். அஹ்மத் (மஹ்ழரி) ஷாதுலியா தரீகாவில் தேன்றிய குலபாக்களின் சேவை (நமது நாடு உட்பட)
    என்ற தலைப்பிலும்
  3. நான்காம் நாள் பிரபல பேச்சாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அஷ்ஷெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்சி) ஷாதுலி நாயகம் வரலாற்று படிப்பினைகள் என்ற தலைப்பிலும்
  4. ஐந்தாம் நாள் மௌலவி அல் ஹாபிழ் முஷாகிர் (அலவி) வழீபா யாகூதியா முக்கியத்துவம் என்ற தலைப்பிலும்
  5. ஆறாவது நாள் கலீபதுல் ஐதுரூஸிதுல் காதிரி மௌலவி அல் ஹாபிழ் எம்.எம் முஸ்தகீம் (நஜாஹி) ஷாதுலியா தரீகா உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ற தலைப்பிலும்
  6. ஏலாவது நாள் ரயீஸ_ல் முகத்தமுஷ் ஷாதுலி மௌலவி எம்.என்.எம். இக்ராம் (பாஸி) ஷாதுலியா தரீகாவினால் நமது நாடு அடைந்தது என்ன? என்ற தலைப்பிலும்
  7. எட்டாவது நாள் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம் பாரூக் (மக்கி) ஷாதுலியா தரீகாவின் அவ்ராதுகள் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும்
  8. ஒன்பதாவது நாள் சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலி கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) குதுபுல் வுஜூத் பாஸி நாயகம் வரலாற்று பார்வை என்ற தலைப்பிலும் உரையாற்றுவார்.

17ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெறும் தமாம் வைபவத்தில் கலீபதுல் குலபாவும் காலி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் காலி அலிய்யா இஸ்லாமிய சட்டக்கல்லூரி பணிப்பாளருமான அல் ஹாஜ் மௌலவி எம்.இஸட். ஸ{ஹ்ர் (பாரி), உரையாற்றவுள்ளார்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியாரின் வழிகாட்டலின்கீழ் இடம்பெறும் இம்மஜ்லிஸில்; கலீபாக்கள், உலமாக்கள், முகத்தமீன்கள், இஹ்வான்கள் பங்குபற்றுவர்.

ஷாதுலிய்யாத் தரீக்காவின் ஸ்தாபகர் அல் குத்புல் அக்பர் இமாம் அபுல்ஹசன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் 852ஆவது ஜனன தினத்தை முன்னிட்டும் அல் குதுபுல் வுஜூத் அஸ் ஸெய்யித் அஷ் ஷெய்க் முஹம்மத் அஜ்வாதுல் பாஸியுஷ் ஷாதுலி (ரழி) அவர்களின் 227 வது ஜனன தினத்தை முன்னிட்டும் ஷாதுலிய்யா மஷாயிகுமார்களின் ஞாபகார்த்தமாகவும் இம்மஜ்லிஸ் இடம்பெறுகிறமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *