உள்நாடு

தற்கொலை செய்து கொண்ட பல்கலை மாணவனுக்காக 33 சட்டத்தரணிகள் ஆஜர்; 20 மாணவர்கள் வாக்குமூலம்

தற்கொலை செய்து கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக பொறியியல் தொழில் நுட்பபீடத்தின் பாதிக்கப்பட்ட மாணவன் சரித் தில்ஷானின் உரிமைகள் தொடர்பில் நீதிமன்றத்தி ல் ஆஜராவதற்குப் பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உட்பட இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல நீதிமன்றங்களின் 33 சட்டத்தரணிக ள் தயாராக உ ள்ளதாக அறிவித்துள்ளனர்.

தனது மன அழுத்தமே தன் தற்கொலைக்கு காரணம் என இம்மாணவன் தற்கொலை செய்து கொள்ள முன் எழுதியிருந்த கடிதத்துக்கு இணங்க இவரது மரணத்திற்கு காரணம் இவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மூர்க்கத்தனமான பகிடிவதையே என பலாங்கொடை மனலவெவ பொலீஸ் நிலையத்தில் இவரை போன்று பகிடிவதைக்கு உள்ளான 20 மாணவர்கள் பொலீஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி பகிடி வதைக்கு உள்ளான இம்மாணவனின் தற் கொலை தொடர்பில் உயர் கல்வி அமைச்சு பொலீஸ் குற்றப் புலனாய்வுத்துறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகம் சுயாதீன சட்டத்தரணகள் குழு என பணத் தரப்புக்குகளின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

பாதிக்கப்பட்ட ஏனைய 20 மாணவர்கள், மாணவனின் குடும்பத்தினர் ஏனைய தரப்புகளின் வாக்கு மூலங்களின் பின் தாம் களம் இறங்கப் போவதாக சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பில் ராஜித பலிஹவடன கல்ஹார விஜேசிங்க ஆகியோர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *