சீனன்கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமத்தின் இரண்டு வருட பூர்த்தி நிகழ்வு
பேருவளை சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸ்அப் குழுமத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வும் ஒன்று கூடலும் சீனன்கோட்டை பெரேரா வீதியில் உள்ள மர்ஹூம் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியார் இல்லத்தில் குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாசீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குழுமத்தின் முக்கிய உறுப்பினரும் பேருவளை நகர சபை சுயேற்சை குழு தலைமை வேட்பாளருமான அஸாம் பளீல் பேருவளை முன்னாள் நகர பிதா மில்பர் கபூர் மற்றும் இந்திய வர்த்தக பிரமுகர் ராஜூ பாய் உட்பட முக்கியஸ்தர்கள் குழுமத்தின் அங்கத்தவர்கள் என பலரும் பங்குபற்றினர்.
ராமிஸ் நாஸிம்,அஸ்வர்,
பௌஸான் ஸுபைர் , முஹம்மத் மினார் ஆகியோர் சீனன் கோட்டை முத்துக்கள் வட்ஸப் குழுமத்தின் இரண்டு வருட பயணம் குறித்து விளக்கினார்கள்.
குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் சமுதாயப் பணிகளுக்காக அஸாம் பளீல் வழங்கப்படும் ஒத்துழைப்புக்கும் நன்றி கூறினர்.






(பேருவளை பி.எம் முக்தார்)