தோப்பு தனி மரம் ஆகுமா?
கண்பார்வையற்ற ஒரு சகோதரனால் உருவான உண்மைக் கதை உங்களுக்காக….
ரஹ்மான் பிறந்தவுடன் வைத்தியர் சொன்னார் உங்கள் பிள்ளையின் கால் நரம்புகள் செயளிழந்து விட்டது என்று. இந்த எதிர்பாராத செய்தியினால் மிகுந்த கவலையுடன் ரஸ்ஸாக்கும், ரஹீமாவும் தம் பிள்ளையினை தூக்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்று ரஹ்மான் என்ற பெயரையும் சூட்டுகிறார்கள்.
ரஸ்ஸாக்கின் குடும்பம் பெரியது. அடுத்த வீட்டு மர்லியா தாத்தா பிறந்த குழந்தையைப் பார்க்கவும், சுகம் விசாரிக்கவும் ரஹீமாவின் வீட்டுக்கு வருகிறார். வந்து சுகம் விசாரிக்க ரஹீமாவினால் பேச முடியாமல் கண்ணீர் கொட்டியபடி நின்றார். நிலை புறிந்த மர்லியா தாத்தா சொல்கிறார் ‘ அல்லாஹ்விடம் பிராத்தனை செய். எல்லாம் சரியாகும்.’ என கூறி தேனீரை குடித்து விட்டு வெளியேறினார்.
காலங்கள் உருண்டோடின. இப்போது ரஸ்ஸாக்கிற்கு மிகப் பெரும் யோசனை தன் பிள்ளையை ஒரு பாடசாலையில் சேர்த்து விட வேண்டும் என. அப்போது ரஹ்மானின் மூத்த சகோதரி பசீரா சொல்கிறார் ‘ தம்பி ரஹ்மானை வெளியில் விட வேண்டாம்.’ சகோதரன் கரீம் சொல்கிறார் ‘ தம்பி ரஹ்மானை எங்கும் அனுப்ப வேண்டாம். நாங்கள் அவரை பார்த்துக் கொள்கிறோம.’; என்று. இந்தச் செய்தியைக் கோட்ட தந்தை ரஸ்ஸாக் ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனக் கூறி பெருமூச்சு விடுகின்றார்.
பின்னர் மேலும் சில வருடங்கள் உருண்டோட ஒருநாள் ரஹ்மான் தனது ரஹ்மானியா சகோதரியிடம் தேனீர் கேற்கிறார். அப்போது எனக்கு அதிகமான வேலை இருக்கிறது. இப்போது என்னால் தேனீர் தர முடியாது என தன் சகோதரி ரஹ்மானியா சொன்னது ரஹ்மானிற்கு மிகப் பெரிய கவலையை உண்டுபன்னியது. பின்னர் தன் தாயை ‘உம்மா, உம்மா’ என்று ரஹ்மான் அழைக்க, அப்போது ரஹ்மானின் மூத்த சகோதரி வந்து ‘என்ன தம்பி’ என கேட்க, கவலை தொண்டையை அடைத்த நிலையில் திக்கித் திக்கி ரஹ்மான் சொல்கிறார் ‘ பசிக்கிரது கொஞ்சம் தேனீர் தா’ என்று. அதனைக் கேட்ட மூத்த சகோதரி பசிரா தேனீரையும், பிஸ்கட் பக்கெட் ஒன்றினையும் கொடுக்கிறார் ரஹ்மானிற்கு.
இன்னும் சில வருடங்கள் கால ஓட்டத்தில் நகர்ந்து செல்ல ரஹ்மானுக்கு 15 வயதாகின்றது. இப்போது ரஹ்மானின் மூத்த சகோதரி பசீராவுக்கு திருமணப் பேச்சு வார்த்தைகள் பல புறங்களில் இருந்து இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இறுதியில் பசீராவின் திருமணம் நிகழும் திகதியும் உறுதியானது. இந்தச் செய்தியால் ரஹ்மான் மனதில் பெரும் கவலையும் குடிகொண்டது. காரணம் தன்னை சிறப்பாய் கவனித்துவரும் தன் மூத்த சகோதரி தன்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவாள்; என்பதனால்;.
இப்படி இருக்க பசீராவின் திருமண நாள் அன்று அந்நேரத்தில் எல்லோரும் வேலைப்பலுவில் மிகைத்துப் போக , ரசகோதரன் ரஹீம் ரஹ்மானை அழைத்துச் சென்று பழைய பொருட்கள் வைக்கும் அரையில் வைத்து மூடிவிட்டுச் செல்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத ரஹ்மான் தன் மிக மோசமான நிலையை எண்ணி கதரிக் கதரி அழுகிறான்.
பின்னர் திருமணம் முடிந்து வேலைகள் குறைய மகளும் காரிலேறி கணவன் வீட்டுக்குச் செல்ல, ரஹ்மானின் தந்தை ரஸ்ஸாக் தன் அன்பு மகனை தேடி அழைகிறார். துன் மகள் ரஹ்மானிpயாவிடம் ரஹ்மான் எங்கே என விசாரிக்க மகள் பதிலளிக்காமல் சென்றுவிட ஒவ்வொரு அரையாக தன் மகனை தேடிய ரஸ்ஸாகிற்கு பழைய பொருட்கள் இடப்பட்ட அரையைத் திறக்கும் போது பதில் கிடைக்கிறது. அந்த அரைக்குள் அழுது அழுது முகம் வீக்கமுற்ற ரஹ்மானை பார்த்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்த ரஸ்ஸாக் யார் செய்த வேலை இது என கேட்க, மற்றைய மகன் ரஹீம் நான் தான் என முன்வர ஏன் இப்படிச் செய்தார் என ஆத்தரித்துடன் கேட்கிறார் ரஸ்ஸாக்.
அப்போது ஊணமுற்ற ரஹ்மானை எவ்வாறு ஊரார்கள் முன் காட்டுவது என ரஹீம் தன் தந்தையிடம் கேட்க, இப்பதிலை சற்றும் எதிர்பாராத தந்தை ரஸ்ஸாக் அதிக நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் வீழ்ந்து தன் உயிரை நீத்தார். அதனை அவதானித்த ரஹ்மான் தன் தந்தையை பார்த்து அழுது புலப்பினார்.
பின்னர் சில வருடங்;களில் ரஹ்மானின் தாயாரும் ரஹ்மானியாவிடம் உன் தம்பி ரஹ்மானை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என வசீயத்துச் செய்துவிட்டு இறந்து போனார். இருப்பினும் வசீயத்து சொல் அளவிலே காணப்பட தோப்பிற்குள் இருந்த ரஹ்மான் முழுமையாய் கைவிடப்பட்டு தனி மரமாய் இருக்கிறார்.
(அக்குறணை முகமத் சவ்ராஜ்)