தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபிய தூதுவர் விஷேட அதிதியாக பங்கேற்பு; தூதுவரை சந்தித்த சிலோன் மீடியா போரம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல். ஏ.மஜீத் தலைமையில் சனி (03), மற்றும் ஞாயிறு (04) இரு தினங்களாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2,077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
நேற்று (03) நடைபெற்ற முதலாம் நாள் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானி விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நேற்றைய முதல் நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்திலிருந்து 82 மாணவர்களும் தொழிநுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மாண்புமிகு காலித் ஹமூத் என். அல்கஹ்தானியை சிலோன் மீடியா போர நிர்வாக உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.







(ஏ.எச்.எம். ஹாரீஸ்)