இரத்தினபுரி மாநகரின் 135 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 28 பேருக்கு எதிராக வழக்கு
இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பெருகும் 28 இடங்களுக்கு எதிராக சபரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் டாக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, டெங்கு நுளம்புகள் இனப் பெருக்கம் அடைவதாக அடையாளம் காணப்பட்டுள்ள 135 இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப் படி இரத்தினபுரி மாவட்டத்தில் சுமார் 1700 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அவர்களில் சுமார் 515 பேர் குறிப்பாக இரத்தினபுரி மாநகரப் பகுதியை சேர்ந்தவர்களாவர்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)