உள்நாடு

சூடு, சொரணை இல்லாமல் அரசுக்கு வாக்களிக்கும் நிலைமை இனிமேல் கிழக்கு மாகாணத்தில் இல்லை என்கிறார் ரவூப் ஹக்கீம்..!

ஜனாதிபதி மரத்தைப் பற்றித்தான் பேசுகிறார். அவருக்கு மரத்தில் பீதி இருப்பது போல விளங்குகிறது. அவருக்கு மரக் காய்ச்சல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்,

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசுக்கு ஒரு பரீட்சைக் களமாக அமையப் போகின்றது.

நடைபெற்று முடிந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு நாடு முழுவதிலுமுள்ள 70 சத வீதமான முஸ்லிம்கள் வாரிவாரி வாக்களித்தார்கள்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழியும், கள்வர்களை பிடிபடுவார்கள் என்று மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள்.

நாங்கள் கோடிக் கணக்காகான அபிவிருத்களைச் செய்தோம் அதைப் பற்றி யாரும் கணக்கெடுக்கவில்லை.

அரசாங்கம் ஒரு வடிகானைக் கூட கட்டாத கட்சியாகத்தான் காணப்படுகிறது.

அவர்கள் அரகல மக்கள் போராட்டத்தின் பின்னால் ஒழிந்து கொண்டு நாங்கள்தான் போராட்டம் செய்தோம் என்று படத்தைக் காட்டி ஆட்சியை கைப்பற்றினார்கள்.

அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு குறைந்த பட்ச கௌரவத்தைக் கூட தரவில்லை. ஒரு அந்தஸ்துள்ள அமைச்சரை கூட தராமல் சாட்டுப்போக்கு சொல்கிறார்கள்.

அப்படி தகுதியானவர்கள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இந்த சமூகத்தை இழிவான நிலையில் பார்க்கின்ற ஆட்சியாளர் கூட்டத்திற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்? என்று ரவூப் ஹகீம் கேள்வி எழுப்பினார்.

இனி சூடு, சொரணை இல்லாமல் அவர்களுக்கு வாக்களிக்கின்ற நிலவரம் கிழக்கு மாகாணத்தில் நடைபெறாது என்பது மிகத் தெளிவான விசயம். கிழக்குக்கு வெளியிலும் அதே நிலவரம்தான் காணப்படுகிறது.

பல இடங்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்க சிந்திக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தைப் பற்றி சிந்திப்பதற்கு தயாரில்லை.

பங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வோம் என்று சொன்னவர்கள் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக வேண்டி அப்பாவி முஸ்லிம் இளைஞனை கைது செய்தார்கள்.

இவர்கள் பயங்கரவாதம் செய்யாத ஆக்கள் போன்று. அவர்கள் செய்தது எல்லாம் பயங்கரவாதம்தான். எத்தனை பஸ்களை, ரான்ஸ்போமர்களை கொளுத்தினார்கள். அரச ஊழியர்கள், இராணுவம், பொலிஸார் ஆகியோர்கா கொலை செய்தார்கள்.

இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். இவர்களது நடவடிக்கைகளுக்கு வரப்போகும் தேர்தலில் முஸ்லிம் சமூகம் தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும் என்றார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *