அத்தனகலை அபிவிருத்திற்கு பாரிய நிதி ஒதுக்கீடு..! கஹட்டோவிட்ட கூட்டத்தில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க..!
அத்தனகலை அபிவிருத்திற்கு பாரிய நிதி ஒதுக்கீடு. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அததனகலையின் வெற்றி மிக முக்கியமானது.எதிர் காலத்தில் அத்தனகலை பிரதேச எல்லைக்குள் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்க ப்படும் என பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அத்தனகலை பிரதேச சபையின் கஹட்டோவிட்ட வட்டார தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களான இன்சாப்,ஜவாத் ஆகியோரை ஆதரித்து கஹட்டோவிட்டவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஈட்டிய வெற்றியை விட பாரிய வெற்றியை உள்ளூராட்சி தேர்தலில் நாம் பெறுவோம்.அது நிச்சயமானது. கஹட்டோவிட்ட வட்டாரத்தில் சேவையாற்றிய நல்ல மனிதர் இன்சாப் தான். அவர் அனுபவமுள்ளவர்.சேவைகளை ஆற்றியுள்ளவர்.அவரையும்ஜவாதையும் வெல்ல வைத்து கஹட்டோவிட்டவின் அபிவிருத்திக்கு சகலரும் பங்காற்றுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

