பேருவளை நகர சபையின் வெற்றிக்கு பேதங்களை மறந்து ஒத்துழைப்பு தாருங்கள்..! ஐ.ம.சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் வேண்டுகோள்..!
பேருவளை நகர சபைப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும்,மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கவும்,தென்னிலங்கையில் சகல வசதிகளையும் கொண்ட நகராக மாற்றியமைக்கவும் எதிர்வரும் தேர்தலில் கட்சி அரசியலையும் மற்றும் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்பது (9) வட்டாரங்களையும் வெற்றி பெறச் செய்ய தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பேருவலை நகர சபை வாழ் வாக்காளர்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன் என பேருவளை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேருவலை மக்கள் இம்முறை தேர்தலில் தொலை பேசிச் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எனக்கு அளிக்கும் வாக்குகளுக்குச் சமனாகும் என்றும்,இதை பேருவலை மக்கள் நிச்சயம் நிறை வேற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
எமது பேருவலை நகர சபை,பிரதேச சபைகளுக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.அதிகாரத்தில் இல்லாத போதும் கூட நாட்டு நலன்களிலும்,மக்கள் பணிகளிலும் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டிருக்கும் மனிதாபிமானி ஸஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவலைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் என்ற ரீதியில் நடைபெறவுள்ள தேர்தலில் தொலை பேசிச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டுமென உங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனெனில் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் சிவப்புச் சட்டைக் காரர்களின் பசப்பு வார்த்தைகளையும்,மாற்றம் என்ற போலி நாடகத்தையும் நம்பி வாக்களித்த வரலாற்றுத் தவறு இத் தேர்தலிலும் நடந்து விடக் கூடாது.
அவர்கள் பதவிக்கு வந்த சில நாட்களில் இருந்தே அவர்களது கபட நாடகத்தையும்,இயலாமையையும் கண்டு வருகிறோம் அல்லவா?
76 வருடங்கள் நாட்டை அதள பாதாலத்துக்குத் தள்ளியோர் என ஏனைய கட்சி காரர்களை விரல் நீட்டி பதவிக்கு வந்த அவர்களின் ஏனைய மூன்று விரல்களும் அவர்கள் மீது சுட்டி நிட்பது நாட்டை நாசமாக்கியவர்கள் அவர்கள் என்பதையே காட்டுகிறதல்லவா?
1971,1988,1989 காலங்களில் நாம் நிம்மதியாய் வாழ்ந்தோமா?அவர்களால் இழைக்கப்ப்ட்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் நமது அழகிய நாடு பின்னடைந்தது என்பதை மறைக்க முடியுமா?இவை எமது இளைய தலைமுறைகளுக்குத் தெரியாது.1990 களுக்குப் பின்னர் அவர்களும் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் அமர்ந்தவர்கள் தான்.அப்படியானால் நாட்டைக் குட்டிச் சுவராக்கிய பங்குதாரிகள் அவர்களும் அல்லவா?