வேற்றுமைகளை மறந்து மு.கா.வுக்கு வாக்களியுங்கள்; களுத்துறையில் ஹிஸ்புல்லாஹ்
களுத்துறை மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை வேட்பாளர் ஆமிர் நஸீர் தலைமையில் போட்டியிடும் வேற்பாளர்களை ஆதரித்து களுத்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஹாஜியார் முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். நஸீர் ஹாஜியார் உட்பட பலரும் இங்கு உரையாற்றினர்.
களுத்துறை மாநகர சபை தேர்தலில் இப்பிரதேச மக்கள் ஒன்றுபட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், களுத்துறை மா நகர சபையின் முதலாவது மேயர் என்ற பெருமையை தலைமை வேட்பாளர் ஆமிர் நஸீர் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் ஐந்து வட்டாரங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவானால் மேலும் மூன்று போனஸ் ஆஷனங்கள் கிடைக்கும் எனவே களுத்துறை மக்கள் இந்த அறிய சந்தர்ப்பத்தை தவறவிட கூடாது.
களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி பதிவு செய்வதற்கு 5000 பேர் வரையிலான மக்கள் கையொப்பமிட்டு பெரும் பங்களிப்புச் செய்ததை எம்மால் ஒரு போதும் மறக்க முடியாது. எனவே களுத்துறை மக்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து கட்சிக்கு வாக்களித்து சிறந்த நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்யவேண்டும் என்றார்.





(பேருவளை பீ.எம். முக்தார் )