பிறைந்துறைச்சேனை சாதுலியாவில் வெளிவிரி மதிப்பீடு
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் வெளிவாரி மதிப்பீடு செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் மதிப்பீடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல், புறக்கிருத்திய செயற்பாடுகள் போன்றவை அவதானிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களுக்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையினை கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் பாடசாலையின் அதிபர் எம்.எல்.நிஜாம்தீனிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.



(எச்.எம்.எம்.பர்ஸான்)