சிறப்பாக நடைபெற்ற சாதுலிய்யா இஃவான்களுக்கான தர்பிய்யா செயலமர்வு
பேருவளை சீனங்கோட்டை சாதுலியா இஃவான்களுக்கான தர்பிய்யா ஆன்மீக செயலமர்வு மே 01 ஆம் திகதி பேருவளை அம்பேபிடிய சஹிரு விலா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
சீனங்கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயளாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்று குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ்-ஷேஹ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
நாடரிந்த பிரபல பேச்சாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அஸ்-ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்ஸி) மாத்தரை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அல்-ஹாஜ் இக்ராம் நிஸார் (அல்-பாஸி) பிரபல இஸ்மிய பேச்சாளர் கலீபதுல் ஐதுரூசியதுல் காதிரி மௌலவி எம்.எம். முஸ்தகீம் (நஜாஹி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். பாரூக் (மக்கி) உட்பட ஸுன்னத் வல் ஜமாஅத் வளவாளர்களால் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மௌலவி அஷ்ரப் ஹஸன் (முர்ஸி) சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் முன்ஷிதீன்கள் மற்றும் சிறார்களின் கஸீதாக்களும் இடம் பெற்றமை விஷேட அம்சமாகும்.
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். ரபீக் ( பஹ்ஜி) சீனன்கோட்டை ஜாமியதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலியா கலாபீட அதிபர் உஸ்தாத் மௌலவி எம். அஸ்மிகான் முஅய்யதி ஆகியோர் துஆ பிரார்த்தனை நடாத்தினர்.
சீனன்கோட்டப் பள்ளிச்சங்க உப தலைவர் அஷ்-ஷேக் எம்.எஸ்.எம். ரிழ்வான் (நளீமி) இணைச் செயலாளரான அல்ஹாஜ எம்.எம்.எம். சிஹாப் , அல்-ஹாஜ் ரிம்ஸான் ஹம்ஸா , அல்-ஹாஜ் அரூஸ் அனஸ் இணைப் பொருளாளர் அல்-ஹாஜ் ஸவாஹிர் ஸரூக் , உறுப்பினர்களான அல்-ஹாஜ் முஸ்னி உவைஸ், அல்-ஹாஜ் தஹ்லான் மன்ஸூர் ஜாமிய்யதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீட , மருதானை முஹம்மத் அல்-பாஸி அரபுக் கல்லூரி மாணவர்கள் உலமாக்கள் முகத்தமீன்கள் முன்சிதீன்கள் , இஃவான்கள் மற்றும் அல்-ஹாஜ் அஸாம் பளீள் , சியான் முனவ்வர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளை இலங்கை வானொளி செய்திப்பிரிவின் செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.





(பேருவளை பீ.எம். முக்தார் )