உள்நாடு

இலங்கையில் இன்னுமொரு சாதனை நிகழ்த்திய ஜே.எம் மீடியா கல்லூரி

ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியினால் வருடா வருடம் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் மீடியா டிப்ஸ் இலவச ஊடக செயலமர்வு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் தலைவரும் ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீனின் தலைமையிலும் பூரண வழிகாட்டலிலும் நடைபெற்ற இந்த செயலமர்வில் 450 இற்கும் மேற்பட்ட ஊடக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வு 10 ஆவது வருடமாகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளமை இலங்கையின் வரலாற்றில் ஒரு சாதனையாகும். ஒரு ஊடக செயலமர்வு தொடர்ச்சியாக 10 வருடங்கள் இலவசமாக நடாத்தப்பட்டு வருவது இதுவே முதற் தடவையாகும்.

இந்த செயலமர்வில்; ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரஸா மல்ஹர்டீன், சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹர், சக்தி எப்.எம் இன் உதவி மேலாளர் வனிதா பரமேஸ்வரன் மற்றும் சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் ஆகியோரால் சிறப்பு விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

கடந்த பத்து வருடங்களில் மீடியா டிப்ஸ் இலவச ஊடக செயலமர்வுகளை நடாத்திய விரிவுரையாளர்களை கௌரவிக்கும் வகையிலும், ஜே.எம். மீடியா கல்லூரியில் கற்று தற்போது தேசிய ஊடகங்களில் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையிலும் விஷேட கௌரவிப்பு நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றமை விஷேட அம்சமாகும்.

இதில் தேசிய புகழ்பெற்ற ஊடகவியலாளர்களான கெபிடெல் எப் எம் இன் ஸ்தாபகர் சியாஉல் ஹசன், சி.ஜி.சி டோக் ஷொப் இன் நிறுவனர் ரினோஷா நவ்ஷாட், கெபிடெல் எப்.எம் மற்றும் கெபிடெல் டிவியின் முன்னாள் தயாரிப்பு முகாமையாளர் ஹம்சி மார்லன், சுயாதீன ஊடகவியலாளர் கிறிஸ்டினா கிரேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜே.எம். மீடியா கல்லூரியின் புதிய ஊடக வகுப்புக்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் அதில் இணைய விரும்புபவர்கள் 0777 121 674 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

இச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பெறுமதியான சான்றிழ்கள் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்த ஊடக செயலமர்வின் செய்திகளை இலவசமாக பகிர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பத்திரிகை, வானொலி மற்றும் இணையத்தளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரி மகிழ்ச்சியடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *