அனைத்து சவால்களையும் வென்று நாட்டைக் கட்டியெழுப்புவோம்; மே தின உரையில் ஜனாதிபதி அனுர
அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நிச்சயமாக வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டுசெல்லத் தயாராக இருக்கும் ஒரு இயக்கத்தால் இன்று நாடு ஆளப்படுகிறது என்றும், அதன்போது, இந்த நாட்டின் தொழிற்சங்க இயக்கமும் தனது பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்த ஜனாதிபதி,
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை வெற்றியடையச் செய்ய அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழிற்சங்கங்க இயக்கங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் மே தினக் கூட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மக்கள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று செயற்படும் ஒரே அரசியல் இயக்கமாக இருப்பது தேசிய மக்கள் சக்தி என்றும், இந்த நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் முழுமையாக தேசிய மக்கள் சக்தியின் கைகளில் உள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை வருமாறு,
நாங்கள் நீண்ட காலமாக மே தினத்தை கொண்டாடியிருக்கிறோம். அப்போது அதிகாரத்தை கைப்பற்ற மக்களை திரட்டுவதே நோக்கமாக இருந்தது. இன்று முதல் முறையாக அதிகாரத்தை கைபற்றி நாட்டை கட்டியெழுப்புவதற்கான கூட்டத்தை நடத்துகிறோம். இன்று தேசிய மக்கள் சக்தி மட்டுமே அரசியல் கட்சியாக உள்ளது. இந்நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் தேசிய மக்கள் சக்தியின் கைகளிலேயே உள்ளது. மற்றைய எதுவும் அரசியல் கட்சிகள் அல்ல. அவை இடிபாடுகள் மட்டுமே. ஆனால் சில குரல்கள் கேட்கிறது. அவற்றில் என்ன தெரிகிறது. நீண்ட காலம் அவர்கள் நாட்டை ஆண்டனர். அத்தோடு நின்றுவிடாமல் அதிகாரத்தை தமது தலைமுறையினர் மீது மாட்டியிருந்தனர். மகன், தம்பி,தந்தை மற்றும் மகன்,மருமகன் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. தந்தை, தாய்,மகள் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது.
மாமன் மருமகன் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் நீண்டகாலமாக அவர்களின் தலைமுறையினர் கைகளில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு, எமது நாட்டு மக்களை நெருக்கடிக்கும் அநீதிக்கும் உட்படுத்தி அதிகாரத்தை கொண்டுச் செல்ல முடியுமென நினைத்திருந்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் 21 இந்நாட்டு மக்கள் மிகத் துணிச்சலாக தீர்மானமொன்றை எடுத்தனர். அந்த தீர்மானத்தின் ஊடாக பல தலைமுறைகளுக்கு அதிகார வரைவை மாட்டிக்கொண்டிருந்தவர்களின் கைகளிலிருந்து மக்களின் கைகளுக்கு ஆட்சி மாற்றிக்கொள்ளப்பட்டது. அந்த அதிகார இழப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களை இழந்ததன் அவலக் குரலை எமக்கு கேட்கிறது.
மறுதிசையில் அவர்கள் அதிகாரத்தில் இருந்த வேளையில் மக்கள் பணத்தை விரயம் செய்து, மிகுந்த வரப்பிரசாதங்களுடன் கூடிய வாழ்வைக் கழித்தனர். பொது சட்டங்களுக்கு அடிபணியாமல் வாழ்ந்தனர். பொதுமக்களுக்கு மேலாக அதிகார பராக்கிரமத்தை கட்டமைத்துக்கொண்டு மக்களுக்கு மேலிருக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினர். இன்று என்ன நடந்திருக்கிறது. பொது சட்டத்துக்கு பணிந்துள்ளனர். வரப்பிரசாதங்களை இழந்துள்ளனர். சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதனால் அவர்களுக்கு இப்போது கவலை வந்திருக்கிறது. அதனால் தான் எதிர்த்திசையில் வேதனையின் அவலக்குரல் கேட்கிறது.
இன்னொரு பக்கத்தில் அவர்கள் செய்த குற்றங்களின் அளவை எங்களை விடவும் அவர்களே அறிவார்கள். அவர்கள் செய்த ஊழல்களையும் எங்களை விட நன்றாக அறிவர். அவர்கள் ஊழல் மற்றும் மோசடி, குற்றங்களின் ஈடுபட்ட விதத்தை அறிவார்கள். அதனை போலவே நாம் யார் என்பதையும் அறிவார்கள். நினைவில் கொள்ளுங்கள்! அவர்களின் குற்றங்களை அறிந்திருக்கும் அளவிற்கு நாங்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால் பீதியின் அவலக் குரல் கேட்கிறது. அதனால் அரசியலின் மறுமுனையில் இன்று என்ன இருக்கிறது? எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததன் வேதனை. வரப்பிரசாதங்களை இழந்திருப்பதன் அவலக்குரல். பீதியில் அல்லாடுகிறார்கள். அதனால் வேறு அரசியல் கட்சிகள் இல்லை. அவர்கள் பொதுவௌியில் வெட்டித்தனமாக பாடித்திரியும் குழுக்களாக மாறியுள்ளனர்.
மார்ச்சில் அரசாங்கம் சரியும் என்று சொல்கிறார்கள். மார்ச் மாதம் முடிந்தவுடன் ஓகஸ்ட் என்று சொல்கிறார்கள். ஓகஸ்ட் வரும் முன்பாக அடுத்த ஏப்ரல் வரை ஒத்திவைக்கிறார்கள். பின்னர் அடுத்தவர் டிசம்பரில் வருவதாக சொல்கிறார். அவை வெட்டித்தனமான பாடல்கள். அந்த பக்கத்தில் அரசியல் கட்சிகள் இல்லை. தூரநோக்கம் இல்லை. ஒருங்கிணைக்கும் இயலுமை இல்லை. செய்வது என்னவென்று தெரியவில்லை. அங்குமிங்கும் சிதறிய தொகுதிகளின் கூட்டிணைவு காணப்படுகிறது. அவை அரசியல் கட்சியல்ல.அதனால் எங்களுக்கு வௌியில் எங்களுக்கு சவாலொன்று இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.
எங்களுக்கு வௌியே எங்களுக்கு சவாலொன்று உள்ளதா? இல்லை! எங்களுக்கு வௌியில் இன்று காணப்படுவது இடிபாடுகளின் கூட்டிணைவே அன்றி சவால் அல்ல. எனவே சவால் எங்கு உள்ளது. எங்களுக்குள்ளேயே எங்களுக்கான சவால் உள்ளது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சவால் இருப்பது எமக்கு அண்மையில்தான். சவால் இருப்பது எமக்கு அருகில் தான். அதனால் சவாலை போக்குவதற்கு நாம் எமக்குள்ளேயே காணப்படுகின்ற எதிர்ப்புக்கள், பொருத்தமின்மை, புதிய நிலைக்கு மாறுவதற்கு இயலாமை,புதிய நிலையை புரிந்துகொள்ள இயலாமை, புதிய நிலைமைக்கு அமைவாக இசைவாக்கம் அடைவது எவ்வாறு? இசைவாக்கம் அடைய இயலாமை என்பன எம்மிடத்திலேயே உள்ளன. வௌியில் வேறு சவால்கள் இல்லை. நாம் யார்? நாம் சிறிய காலமன்றி 65 வருடகால அர்ப்பணிப்பின் உரிமை எம்மிடத்தில் உள்ளது. ஒரு நோக்கத்துக்கான அர்ப்பணித்த கட்சியே இன்று இங்கு கூடியுள்ளது.
பல தலைமுறைகளாக வெற்றி, தோல்வி, கடுமையான சவால்கள், அருகில் இருந்தவர்கள் கைவிட்டுச் சென்றமை, கைவிட்டுச் சென்றது மட்டுமல்லாது எதிரான கட்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்களுடன் நாம் நோக்கத்தை கைவிடாமல் இருந்தோம். எனவே நாங்கள் யார்? நோக்கத்துக்கான உரிமைகளை தோலில் சுமந்து செல்லும் அமைப்பு. சில நேரங்களில் நாம் பழகிப்போன அதிகாரத்திற்கு வேலை செய்திருக்கிறோம். இலக்குகளை மிகத்தூரமானவை சவால்கள் நெருக்கமானவை எமக்கு முன்பாக பல குழப்பங்கள், ஆனாலும் நாம் பாடுபட்டோம், எமது வழக்கமான அதிகாரம் எம்மை பாடுபட தூண்டியது. வேலை செய்வதால் வந்த வழக்கம் எம்மை பாடுபட தூண்டியது. இவை அனைத்தையும் செய்து கடந்த செப்டம்பர் 21 அதிகாரத்தை கைபற்றினோம்.
இப்போது எம்மிடம் இருப்பது வழக்கமான அதிகாரம் அல்ல. மாறாக நம்பிக்கையின் அதிகாரமே உள்ளது. எமக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த நாட்டு மக்கள் எம்மை நம்புகிறார்கள். எம்மீது எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளனர். அரசியல் கட்சி என்ற வகையில் நாங்கள் பொதுமக்களை ஒரு நோக்கத்தை நோக்கி திரட்டிக்கொண்டிருக்கிறோம். அதுவே நம்பிக்கையின் பலம். எனவே எமக்கு இருப்பது அரசியலமைப்பில் கிடைத்த அதிகாரத்தை மிஞ்சி செல்லும், பாராளுமன்றத்தில் எமக்கு கிடைத்த அதிகாரத்தை மிஞ்சிய நம்பிக்கையின் பலம் எம்மிடம் உள்ளது. 65 வருடங்களாக ஒரே நோக்கத்துடன் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வரம்புகளை மிஞ்சிய அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ள நாங்கள், உறுதியாக இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையின் சக்தியுடனே நாங்கள் இதில் இறங்கியிருக்கிறோம்.
அதனால் பெரும் நம்பிக்கையோடு நாம் இந்த பணியை செய்கிறோம். மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நடைமுறை தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மிகக் கடுமையான யாதார்த்தமே எம்முன் உள்ளது.
பாதாளத்திற்குள் விழுந்திருக்கும் பொருளாதாரம், சமூகத்தில் மற்றையவர் மீதான கருணையை இழந்திருக்கும் சமூகம், சட்டம் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்பட நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகம், எமது நாட்டின் நிறுவனக் கட்டமைப்புக்கள் மற்றும் அவற்றின் நோக்கங்கள் முழுமையாக சரிவடைந்திருந்த நிலைமை, சமூக பொறுப்புணர்வு தொடர்பில் அனைத்து பிரஜைகள் மத்தியிலும் சிதைந்துபோன நம்பிக்கை நிறைந்த சமூகமே இருக்கின்றது. எம்முன் இருப்பது யதார்த்தம் கடுமையானது என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்.
ஆனாலும், சமூகத்தின் நீதி மற்றும் நியாயத்துக்காக போராடுகிறோம். கடுமையான யதார்த்தம் எம்முன் இருந்தாலும் எமது நோக்கங்கள் எவ்வாறானது? நாம் சமூகத்தில் நீதியை உருவாக்குகிறோம். நீதியை நிலைநாட்டுகிறோம். அவ்வாறு கைவிடாமல் போராடுவோம். கைவிடப்போதவில்லை!
சமூக நீதியை நிலைநாட்டுவது நாளாந்தம் நடக்கும் தினசரி நிகழ்வல்ல. சமூக நீதியை உருவாக்குவது ஓரிரு இரவுகளில் நடக்காது. ஆனாலும் சமூகத்தின் நீதி மற்றும் நியாயத்திற்காக நாம் மிகவும் சரியான முறையில் செயல்படுகிறோம். அது அனைவருக்கும் தெரியும்.
பொதுவாக விவசாயியொருவர் தனது அறுவடையை செய்துகொள்ளும் வரையில் எடுக்கின்ற முயற்சிகள் முறையான நெசவாகும். வயல்களை சுத்தப்படுத்தி, வரம்புகளை கட்டி, வயல்களை உழுது, நெல்களை நாட்டி, புல்களை அகற்றி,உரமிட்டு அறுவடை செய்ய வேண்டும். எனவே தனது அறுவடையை பெற்றுக்கொள்ள சரியான முறையொன்று அவசியம் என்பது எந்தவொரு விவசாயிக்கும் தெரியும். அதனை விவசாயிகள் அறிவர். பொதுவாக வீட்டுப் பணிகளை செய்யும் பெண்மணி அதற்கான தகுந்த முறைமையை அறிவார். எழும்புதல், உணவு சமைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்குதல், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளல், அவசியமான வருமான வழிகளை உருவாக்குதல் என்ற வகையில் பெண்னொருவர் வீட்டை பராமரிப்பதும் சரியானதொரு முறையிலாகும்.
எனவே, கடுமையான சமூக யராத்தம் கொண்ட நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவது சமூக நியாயத்தை நிலைநாட்டுவது போகிற போக்கில் செய்யப்படும் காரியம் அல்ல. அது தற்செயலாக நடப்பதும் அல்ல. அது மிக நன்றாக திட்டமிடப்பட்ட நல்லதொரு முறைமையாகும். ஒரே இரவில் பிரதிபலன்களை எதிர்பார்ப்பவர்களுக்கே இதனை சொல்கிறேன். 76 வருடங்களாக அழிவின் ஆழத்திற்கே கொண்டுச் சென்று, ஆறு மாதங்களில் பலனை எதிர்பார்ப்பவர்களுக்குச் சொல்கிறேன். மிகக் கடுமையான யதார்த்தமொன்று உள்ளது அதனை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.
அந்த யதார்த்திற்கு மத்தியில் திட்டமிடப்பட்ட எதிர்காலத்தை உருவாக்க சரியான முறையொன்று அவசியம். எமது செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்து அதனை சரியான முறையில் செய்வோம் என்பதை இந்நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறுகிறேன். வெற்றிகரமாக அதனை செய்வோம். முயற்சி கைவிடப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது தற்செயலாகவோ, எதேற்சையாகவோ நடக்காது. கடுமையான யதார்த்தத்திலிருந்து புதிய சமூகத்தை தோற்றுவிக்க குறுக்கு வழிகள் இல்லை. இது மிகவும் சரியான திட்டமிடப்பட்ட முயற்சியாகும். தேசிய மக்கள் சக்தி மக்களின் எதிர்பார்ப்பு, நோக்கங்கள், மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் தன்மை என்ற அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளது.
நீங்கள் சொல்வதை விடவும் அதிகமாக நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் சக்தியை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். எனவே நாங்கள் மிகவும் திட்டமிட்டவாறு அழிவுகரமான சமூகத்தை, சரியான பொருளாதாரம் சரியான சமூக அணுமுறைகளுடன் கூடிய பயணத்தை செல்லக்கூடிய நாடாக மாற்றுவதற்கான பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஆரம்பம் எங்குள்ளது. அதற்கு வழுவான அத்திபாரத்தை இட வேண்டும். அத்திபாரம் இல்லாத நாடே எம்மிடம் இருந்தது. துடுப்பு உடைந்த கப்பலை போன்றது. இலக்கு இல்லாமல் மிதந்துகொண்டிருந்த நாடு. எல்லையின்றி போகிற போக்கில் சென்றுகொண்டிருந்த நாடு. போகிற போக்கில் சென்ற சமூகம், இதனை சரியான பாதைக்கு மாற்ற வலுவான அத்திபாரத்தை இட வேண்டும். அதுவே முக்கியமானது. கடந்து வந்த காலத்தில் அத்திபாரத்தை அமைத்தற்காக நாங்கள முடிந்தளவில் பாடுபட்டிருக்கிறோம். அத்திவாரத்தின் பிரதான தூண்கள் யாவை? ஊழலற்ற அரசியல், இந்நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாதையை அமைத்துகொள்ள கட்டியெழுப்ப வேண்டிய முதல் தூண் ஊழலற்ற அரசியல். 76 வருடங்களுக்கு பின்பு மக்களின் ஒரு ரூபாவைக்கூட திருடாத விரயம் செய்யாத அரசியல் இலங்கையில் உருவாகியிருக்கிறது. அந்த தூண் இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
அந்த அத்திபாரத்தை நாம் அமைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அடுத்தாக அந்த வலுவான அத்திபாரத்தை அமைக்க எமக்கு தேசிய ஒற்றுமை அவசியம். தேசிய ஒற்றுமை இல்லாமல் எமது நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது. என்ன நடந்திருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் எம்மையும் மிஞ்சி மக்கள் அதற்காக அடி வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் நாங்கள் பின்தங்கியிருப்பதாக நினைக்கிறோம். மக்கள் முற்போக்காக இருக்கிறார்கள். வடக்கு , கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது பாரிய நம்பிக்கை வைத்து எம்மையும் மிஞ்சிய அடியை வைத்தனர். எவ்வாறான நிலைமை. வடக்கோடு மிகக் குறைவாகவே அரசியல் செய்திருக்கிறோம். கிழக்கிலும் மிகக் குறைவாகவே அரசியல் செய்திருக்கிறோம். வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் தொடர்பாடல் செய்ததும் மிகக் குறைந்த அளவிலாகும். ஆனால் வடக்கின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் பாரம்பரிய தலைவர்கள் அனைவரையும் புறக்கணித்து எம்மை நம்பியதால் என்ன தெரிகிறது. தேசிய ஒற்றுமையின் தேவைக்காக எம்மை மிஞ்சிய அடி வைக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் திரும்பிச் செல்வதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. அவர்களின் உரிமைகள், கலாச்சார உரிமைகள், மொழி உரிமை, பூர்வீக காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அவர்கள் இந்நாட்டு பிரஜைகளாக வாழ்வதற்கான உரிமைகள் என அனைத்தையும் உறுதிப்படுத்துவோம்.
அதுவே நாட்டின் முன்னேற்றத்துக்கான இரண்டாவது தூண். அது இல்லாமல் எமது நாட்டை கட்டியெழுப்புவது குறித்து நினைத்துப்பார்க்கவும் முடியாது. பழைய அரசியல் என்பது யாது? பிளவுபடுத்தப்பட்ட அரசியல். வேறுபடுத்தப்பட்ட அரசியல். முதல் முறையாக இலங்கையை ஒற்றுமைப்படுத்தும் அரசியல் வென்றிருக்கிறது. வடக்கு,கிழக்கு,தெற்கு மக்கள் ஒரே நம்பிக்கையுடன் ஒரே அரசியல் கட்சியுடன் இணைந்திருக்கிறார்கள். எமக்கு தேவையான அத்திபாரம் அதுவாகும். அதனை நாங்கள் அமைத்திருக்கிறோம். அதுவே அளவீடு, அதுவே புரட்சி, அதுவே நாம் பெற்றுக்கொள்ளும் வெற்றி. மிக்க முக்கியமான அடியை நாங்கள் வைத்திருக்கிறோம். அதேபோல் எமக்கு வலுவான அரச சேவையொன்று அவசியம். எமது அரச சேவை சரிந்திருந்தது. அரச நிறுவனங்கள் சரிந்து கிடந்தன. நாம் வலுவான அரச சேவையை ஆரம்பிப்போம். 30 ஆயிரம் பேரை இணைத்துகொள்ளவுள்ளோம். அரச சேவையின் அடிப்படைச் சம்பளத்தை பெருமளவில் அதிகரித்திருக்கிறோம். அரச சேவை மீதான ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறோம்.
அதேபோல் அரச சேவையில் மேலீட்டுக் காணப்படும் அலட்சியத்தன்மை, செயலதிறன் இன்மை, உள்ளிட்ட அனைத்தையும் நீக்கி வலுவான அரச சேவையை கட்டமைப்பதற்கான அத்திபாரத்தையும் இட்டுள்ளோம். அடுத்த முக்கியமான விடயம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது, எமது நாடு எவ்வாறான நாடாக இருந்தது? மேலிருப்பவர்களுக்கு சட்டம் இல்லாத நாடு, மேலிருப்பவர்கள் சட்டத்துக்கு அடிபணிவதில்லை. மேலிருப்பவர்களுக்கு சட்டத்துக்கு பயமும் இல்லை. இலங்கையில் முதல் முறையாக மேலிருப்பவர் கீழிருப்பவர், அதிகாரத்தில் இருப்பவர் , அதிகாரம் இல்லாதவர் என்று அனைவருக்கும் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்தும் நாடொன்றை உருவாக்கியிருக்கிறோம். நல்லமல்லவா! அவ்வாறான நாடொன்று வேண்டுமல்லவா! ஆனால் பழைய நாடு என்று நினைத்துக்கொண்டிருக்கும் சிலர் ஒவ்வொரு கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதை சொன்ன மாத்திரத்திலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படுகிறார்.
அவர் இன்றும் பழைய நாடு என்ற நினைப்பில் இருக்கிறார். இல்லை இது புதிய நாடு. சட்டத்திற்கு அனைவரும் அடிபணிய வேண்டும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமமானவர்கள். சட்டமா அதிபர் திணைக்கம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கீழ் மட்ட மக்களுக்கு மாத்திரம் செயல்படும் நிறுவனம் என்று நினைத்தால் அது பழைய யுகம். சட்டம் அனைவருக்கும் சமமான நாட்டை உருவாக்கியுள்ளோம். அதுவே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடுத்த முக்கியமாக அத்திபாரம். அதனை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். சட்டத்தினால் நிறுவனங்களை பலப்படுத்துவதற்கு அப்பால் நடைமுறையிலும் அதனை காண்பிப்போம். குற்றம் செய்தது எப்போது, ஊழல் செய்தது எப்போது என்று இல்லாமல் காலம் எப்போதாக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
சட்டத்தின் முன்பு அச்சப்பட வேண்டும், சட்டத்திற்கு பணிய வேண்டும் அதுவே சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான பாதை. அதனையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அடுத்ததாக சர்வதேசத்தின் முன்பாக கரும்புள்ளி வைக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியிருந்தது. நாம் படிப்படியாக மிக வலுவாக சர்வதேசத்திற்கு முன்பாக பாராட்டப்படும், சர்வதேசத்தின் முன்பாக எமது சுயாதீனத்தன்மை, எமது நாட்டை முன் நிறுத்தி செயல்படக்கூடிய அரசாங்கத்தை கட்டமைத்திருக்கிறோம். அதுவே நாட்டின் தேவை. அதனாலேயே ஜப்பான் அரசாங்கம் நிறுத்திய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கிறது. சீனா அரசாங்கம் நிறுத்திய திட்டங்களை ஆரம்பிக்கிறது. இந்திய அரசாங்கம் மேலும் பல அன்பளிப்புக்களை வழங்க இஙணங்கியுள்ளது. நாம் மிக வலுவான சர்வதேச ஒத்துழைப்புக்கான அத்திபாரத்தை அமைத்திருக்கிறோம். இவ்வாறான அத்திபாரங்கள் அவசியம்.
ஊழலற்ற ஆட்சி, சகலருக்கும் சமமான சட்டத்தை கொண்ட நாடு, இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் ஆட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் ஆட்சி என்ற அனைத்தையும் நாங்கள் கட்டியெழுப்பியிருக்கிறோம். அதனால் இந்த அத்திபாரத்தின் மீது மிக வலுவான கட்டிடத்தை அமைப்போம். அதில் சமத்துவம், நீதி, சமூக கருணை, சமூகத்தின் பிணைப்பு, ஒருவருக்கொருவர் கௌரவம் செயதல், பொருளாதார மலர்ச்சி, தூய்மையான நாடு, சுற்றாடலை மிகவும் தூய்மையாக பராமரிக்கும் சமூகம் அதற்கு இருக்கும். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியின் மீதும் அன்பு காட்டும் சமூகத்தை நாம் தோற்றுவிக்க வேண்டும். எனவே அவ்வாறான சமூகத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்திவாரத்தை அமைத்திருக்கிறோம். அமைத்துக்கொண்டும் இருக்கிறோம். சமூக எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய கட்டிடத்தை இதன் மீது நாங்கள் அமைப்போம். அந்த கட்டுமானத்தில் நம் அனைவருக்குமான பணிகள் உள்ளன.
அரசியல் அதிகார தரப்பான எமக்கும் பெரும் பணி உள்ளது. எமது பணிகளை நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். எமது வரம்புகளையும், இயலுமைகளையும், இயலாமைகளையும் அறிந்துகொண்டிருக்கிறோம். எம்மால் முடியாதவற்றை மற்றையவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். எம்மால் செய்ய முடியாதவற்றை மற்றையவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொண்டு ஊழல்,மோசடி, விரயமற்ற ஆட்சிக்காக அர்ப்பணிப்போம். அத்திபாரத்தை அமைக்க மிக வலுவான அரசியல் தலைமைத்துவம் அவசியம் அதனை நாம் வழங்குவோம். அதனை செய்திருக்கிறோம். அடுத்ததாக எமது கைதொழில் மற்றும் தொழில் முனைவோருக்கு முதலீடு செய்வதற்கான அழைப்பை விடுத்திருக்கிறோம். உங்களுக்கு அவசியமான வசதிகளுடன் முடங்கும் இடங்களை கூறுங்கள் அதற்கு தீர்வு தருகிறோம். கொழும்பு நகருக்குள் வணிக பெறுமதியுடைய வெற்று நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை எமது முதலாவது ஆட்சி காலத்தில் வெற்றிடங்களாக வைக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். அவை அனைத்தையும் நாட்டின் அபிவிருத்திகாக பயன்படுத்திக்கொள்வோம். அதற்காக கைத்தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். தேவையான சட்ட பாதுகாப்பை வழங்குவோம். உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தித் தருவோம். ஆனால் சரியான வரியை செலுத்துங்கள் அதில் ஒவ்வொரு ரூபாவையும் நாங்கள் பாதுகாத்து தருவோம்.
கைத்தொழிலாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு பெரும் பணி உள்ளது நாட்டின் விளைச்சல் நிலங்களில் மீண்டும் விளைச்சலை ஆரம்பியுங்கள். ஒரு பகுதியிலும் வெற்று நிலங்களை வைக்காமல் விவசாய புரட்சியை நாட்டில் ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். உர நிவாரணத்தை அதிகரிப்போம், சிறந்த விதை நெல்லை பெற்றுத்தருவோம். விவசாயத்தில் தொழில்நுட்பத்பை புகுத்த நடவடிக்கை எடுப்போம். நிலையான விலையை வழங்க நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டில் விலைச்சலை ஆரம்பியுங்கள். நாட்டை கட்டியெழுப்ப விவசாயிகளான உங்களுடைய பங்களிப்பு அவசியம். எல்லை தெரியாமல் எமது பெரும் கடல் பரப்பில் சென்று மீன்பிடிக்கும் மக்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் வசதிகளை தருகிறோம். கடலுக்குச் செல்லுங்கள் மீன்பிடித்தல் அறுவடையை செய்யுங்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யுங்கள்.
அதேபோல் எமது தொழிற்சங்கங்கள் பழைய அணுகுமுறைகளை கைவிடுங்கள். ஊசித் துண்டுக்கும் போராடிய காலத்தை கைவிடுங்கள். எமக்கு சட்டத்தினாலும், நியதிகளாலும் விடயங்களை கைவிடக்கூடிய அரசியல் கட்டமைப்பொன்று உருவாகியுள்ளது. எனவே தொழிற்சங்கங்கள் ஊசித் துண்டிலிருந்து அனைத்தையும் கேட்காதீர்கள். கால அவகாசம் தாருங்கள். வீதியில் இறங்கி விழிப்பூட்ட வேண்டிய கட்சி நாங்கள் அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களோடு பணியாற்றியிருக்கிறோம். உங்களுடைய எதிர்பார்ப்புக்களை புரிந்துகொண்டுள்ளோம். அவ்வாறு இல்லாவிட்டால் உங்கள் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்திருக்க மாட்டோம். உங்களுடைய சிறிய அழுத்தம் கூட இல்லாமல் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தோம். நீங்கள் கேட்காமல் அனர்த்த கடனை அதிகரித்தோம். உங்களுடைய கோரிக்கை இன்றி சம்பள உயர்வை அதிகரித்தோம். மேலதிக நேர கொடுப்பனவை அதிகரித்தோடம். மேலதிக வேலை நேர கொடுப்பனவை அதிகரித்தோம். எனவே சிறிதொரு சொல்லின் மீது நின்று போராட தயாராக வேண்டாம்.
அது அநீதியானது. இன்று வந்திருப்பது நாட்டை கட்டியெழுப்ப தலையீடு செய்யும், நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லும் கட்சியே ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் எமது தொழிற்சங்கங்கள் பழைய ஆடைகளை அகற்றிவிட்டு புதிய ஆணைகளை அணிய வேண்டிய காலம் வந்திருக்கிறது. அரச சேவையை வலுவூட்டும் எண்ணம் கொண்ட அரசியல் கட்சியே இன்று இருக்கிறது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு வலுவான அரச சேவை அவசியம் என்பதை நம்புகின்ற அரசியல் கட்சி, அரச சேவையை பலப்படுத்துவதற்கான குழுக்களை உள்ளீர்க்க முடியும் என்ற நம்பிக்கை மிகுந்த அரசியல் கட்சி, பதவி உயர்வை அரசியல் அன்றி இயலுமை மற்றும் திறனுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டுமென நினைக்கும் அரசியல் கட்சியே இன்று உள்ளது. இன்று இருப்பது தொழிற் சங்கங்களுடன் ஒன்றாக பணியாற்றிய அவர்களின் இதயத் துடிப்பை அறிந்த, அவர்களித் தேவைகளுக்காக சுவரொட்டிகளை வரைந்த, அதற்காக போராடிய, அவர்களுக்காக குரல்கொடுத்த அரசியல் கட்சி. எம்மிடையே இருக்க வேண்டிய வேறுபாடுகள் என்ன? எந்த முரண்பாடுகளும் இருக்க முடியாது. ஒற்றுமையாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்க எம்மோடு இணைந்துகொள்க.
எமது இளம் அமைப்பினருக்கு பெரும் பணி உள்ளது. இளையோரின் எதிர்காலம் தொடர்பிலான மிகப் பாதகமான வரைபே அவர்களின் முன்பாக இருந்தது. சரிந்துபோன கனவுகளே இருந்தன. மீண்டும் கனவு காணும் இளம் சமூகத்தை உருவாக்குவோம். இந்த நாட்டுடன் இணைந்து உங்களுக்கான பணியை ஆற்றத் தயாராகுங்கள். பொதுமக்கள், கலைஞர்கள், சாகித்தியர்கள், மீனவர்கள், விவசாயி, வர்த்தகர், கைத்தொழில் முயற்சியாளர், அரசியல் வாதிகள் என்ற வகையில் நாங்கள் உட்பட அனைவரும் எமது சந்ததியை விடவும் எமது எதிர்கால சந்ததிக்கு நல்லதொரு நாட்டை அமைத்துக்கொடுக்க போராடுவோம்! மல்லுக்கட்டுவோம்! எம்மால் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்லதொரு நாட்டை உருவாக்க வேண்டும்.
எமது விரல்கள் தொங்கி பாலர் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டும். எமது தாயின் கர்ப்பத்தில் துடிக்கும் குழந்தைக்கு இப்போது இருப்பதை விடவும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதற்காகவே இந்த அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருக்கிறோம். எனவே வௌியில் இருப்பவர்கள் வெட்டிப் பாடல் பாடித் திரிவோர். அரசியலும் சவாலும் எங்களிடமே உள்ளது. அவ்வளவுதான்! வௌியில் எந்த சவாலும் இல்லை. தலைவர்கள் உள்ளனரா? அரசியல் கட்சிகள் உள்ளதா? இலட்சக்கணக்கில் கிராம மக்கள் இங்கு கூடியுள்ளனர். நண்பர் சென்று கிராமங்களை பிடித்துகொண்டாரா என்பது தெரியவில்லை. மக்கள் காலி முகத்திடலுக்கு வந்தவுடன் கிராமங்களை கைபற்றுவார்களாம்! வெட்டிப் பேச்சு! அவர்களின் அரசியல் கட்சிகளும், நோக்கங்களும் முடிவைக் கண்டுள்ளன. அடி நுனியின்றி சிதைவை கண்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களின் வலது கைகள் எழுதுவதை வாய் பேசுவதில்லை. ஒரு மேடை சொல்வதை மற்றைய மேடையில் சொல்வதில்லை. பாரிய குழப்பத்தில் உள்ளனர். எனவே வௌியே சவால்கள் முடிந்துவிட்டன. இப்போது இங்கு மட்டுமே உள்ளது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும். மக்களை மென்மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்லும் பயணத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். அந்த பயணத்தை வெற்றியோடு நிறைவு செய்ய, எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க புதிய பாய்ச்சலை புதிய துணிச்சலுடன் நாம் ஆரம்பிப்போம்.
அதற்காக இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து இந்த சவாலை ஏற்கத் தயார் என்று காண்பித்துள்ளனர். நாட்டை கட்டியெழுப்ப தயார் எனும் செய்தியை கூறுகின்றனர். தேசிய மக்கள் சக்தியே நம்பிக்கைக்குரிய கட்சி என்ற செய்தியை கூறுகின்றனர். எதிர்காலம் சிறக்கும் என்ற செய்தியை கூறுகின்றனர். நாட்டுக்கும் உலகத்திற்கு வெட்டிப் பேச்சு பேசுவோருக்கும் இதுவே செய்தி. நாம் மேற்கொள்ள வேண்டிய புதிய பாச்சலை மே 6 மேற்கொள்ள முடியும். ஜனாதிபதி, கெபினட், பாராளுமன்றம், பிரதேச சபை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பதே எமது தேவையாகும். ஒரே வகையில் அணிவகுத்து நிற்க வேண்டும். அரசியல் அதிகார தரப்பு ஒரே திசைக்கு பயணிக்க வேண்டும். ஜனாதிபதி பதவி தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. அமைச்சரவை தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. பாராளுமன்றம் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. எனவே பிரதேச சபைகளும் நகர சபைகளும் தேசிய மக்கள் சக்தி வசமாக வேண்டும். அதனுடன் இணைந்த மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டு்ம். எனவே இனியும் மத்திய அரசு திருடாது. பிரதேச சபையும் திருட்டுக்கள் இல்லாத பிரதேச சபை. மத்திய அரசு விரயம் செய்யாது. பிரதேச சபையிலும் விரயம் இருக்காது. மத்திய அரசாங்கம் சேவையும் செய்யும். பிரதேச சபையும் நகர சபையும் சேவை செய்வதாக அமையும். அவைதான் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபைகளும் நகர சபைகளுமாகும். நல்லதொரு மக்கள் ஆணையுடன் வென்றோம். இந்த நாட்டை புதிய புரிதலுடன் மலரச் செய்து, முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்.
எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எமக்கு இவ்வாறான வாய்ப்பு சில சமயங்களில் கிடைத்திருக்கிறது. மீண்டும் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை விட எமக்கு எவ்வகையிலும் நியாயமான உரிமை இல்லை. எனவே கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக முகாமைத்துவம் செய்து. சரியாக திட்டமிட்டு, இலக்குகளுடன் இந்த நாட்டை புதிய திசைக்கு மாற்றுவோம். சமூக நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்திய எதிர்கால சமூகத்தை கட்டமைப்போம். அதற்காக முன்வருவோம். அர்ப்பணிப்போம். நன்றி.

