வட மத்திய ஆளுனரால் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு
பொலன்னறுவை கலஹகல ஆரம்ப பாடசாலையின் இரண்டு மாடிகளைக் கொண்ட வகுப்பறை கட்டிடத்தை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச திறந்து வைத்தார்.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கட்டிட நிர்மாணப் பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் 05 வகுப்பறைகளையும் அதிபர் அலுவலகத்தையும் கொண்டதுடன் இங்கு 08 ஆசிரியர்கள் கடமையாற்றுவதுடன் 118 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிகழ்வில் வடமத்திய பிரதான செயலாளரும் கல்வி அமைச்சின் செயலாளருமான கே.எம்.எஸ்.கே.ஜயலத் மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். எம்.டபிள்யூ.சமரகோன் பொலன்னறுவை கல்வி வலய பணிப்பாளர் பிரசாத் ஜயவர்தன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)