சமூக புறக்கணிப்புக்கு அநுர அரசாங்கத்துக்கு இம்முறை தேர்தலில் மக்கள் தெளிவான செய்தி ஒன்றை வழங்க வேண்டும்; கஹட்டோவிட்டாவில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்
அநுர அரசாங்கம் வந்ததில் இருந்து முஸ்லிம்கள் பல்வேறு விதங்களில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.ஆரம்பத்திலேயே இந்த நாட்டில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருந்தது அது குறித்த நபருக்கான அழங்கரிப்பாகவோ, தனிப்பட்ட நபருக்கான ஆசனமாகவோ பார்க்கப்படுவதில்லை மாறாக இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பில் அந்த சமூகத்தை பிரதிபலிப்பதற்காக வழங்கும் அடையாளமாகும்.
இதுவரை வந்த எந்த அரசாங்கம் ஆக இருந்தாலும் அந்த அரசாங்கத்தில் கட்டாயமாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தே வந்துள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக்கி அவமதிப்பு செய்யும் சமூக புறக்கணிப்பாகும் சர்வதேச ரீதியில் கூட முஸ்லிம் அமைச்சர் நியமனத்தை அந்த நாட்டு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமாக அடையாளமாகவே பார்க்கிறார்கள் அந்த அடையாளத்தை கூட அநுர அரசாங்கம் முஸ்லிம்கள் தரப்புக்கு வழங்காதது மிகவும் வருத்தமளிக்க கூடியதும் சமூகத்தை அவமதிக்ககூடியதுமான செயற்பாடாகும் என்று கஹட்டோவிட்ட வட்டாரத்தில் நேற்று இரவு நடைபெற்ற அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில் சமீபத்தில் ஹொரகொல்ல முஸ்லிம் இளைஞன் ஒருவரை அநியாயமான முறையில் இஸ்ரேலிய அராஜகர்களின் இனவழிப்பு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எதிர்ப்பை வெளியிட ஒட்டப்பட்ட சாதாரண இஷ்டிகர் ஒன்றுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பல வாரங்கள் விசாரணை நடாத்தி இருந்தார்கள் இதற்கு கையொப்பமிட்டதும் பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திஸாநாயக்க ஆகும்.
தற்போது இந்த அரசு யூத சியோனிஸ்டுக்களின் ஏஜெண்டாக மாறியுள்ளது இஸ்ரேல் யூதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது ,அவர்களுக்கான மத வழிபாட்டுத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது அவர்களின் முக்கிய இடங்களுக்கு அரசு STF பாதுகாப்பு கூட வழங்கி வருகிறது ஆகவே முஸ்லிம் விரோத போக்கை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகின்றது இதற்காக முஸ்லிம்கள் சரியான எதிர்ப்பை காட்ட வேண்டும் அதற்காக அவர்களுக்கு சரியான செய்தியை வழங்க வேண்டும் உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை மக்கள் இந்த போக்குக்கு எதிராக சரியான செய்தி ஒன்றை வழங்க வேண்டும் அந்த செய்தியை அநுர அரசாங்கத்திற்கு வழங்க இத்தேர்தலை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் முஸ்லிம்கள் தொடர்ந்தும் அடிமைத்தனமாகவோ,புறக்கணிக்கப்பட்ட சமுதாயமாகவோ இருக்க முடியாது நிச்சயமாக இம்முறை அநுர அரசாங்கம் தமக்கு காணப்படும் பெரும் பான்மை ஆதரவு சரிவை காணக்கூடியதாக இத்தேர்தல் அமையவுள்ளது ,கிழக்கிலும் நாடளாவிய ரீதியிலும் இவ்வாறானதொரு சரிவை இந்த அரசு கண்டு கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
ஆகவே ஆளும் தரப்பில் இருந்து தெரிவ செய்யப்படும் உறுப்பினர்களுக்கே தமது மத்திய அரசின் நிதியுதவி கள் வந்து சேர்வதற்கு இலகுவாக இருக்கும் அல்லது ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி செய்வோம் என்பது ஒருவகையான இலஞ்ச எடுப்பதை போன்ற செயற்பாடாகும் மிகவும் பாரதூரமான விடயமாகும் இதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனாலும் முதுகெழும்பில்லாத ஆணைக்குழு அதை மீண்டும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையை எடுத்து கொண்டால் அதன் வருமானம் 30பில்லியன் ரூபாய்களாகும் இப்படியான வருமானம் இருக்கும் மாநகர சபைகள் மத்திய அரசின் அபிவிருத்தி நிதிகளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் இம்முறை கொழும்பில் தமது கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் என்று எதிர் பார்ப்பதாகவும் மேலும் கூறினார்.
சமூக சேவைகள் ஆற்றிய அல்ஹாஜ் பிர்தௌவஸ் அவர்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கஹட்டோவிட்ட வாழ் மக்கள் நிச்சயமாக ஹாஜியாரை வெற்றி பெற செய்வார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார் .
இந்த கூட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடும் அல்ஹாஜ் பிர்தௌவ்ஸ் மற்றும், முன்னால் பொதுஜன பெறமுண கட்சி கஹட்டோவிட்ட வட்டார அமைப்பாளரும் தற்போதைய தராசு சின்னத்தில் போட்டியிடும் சகோதரர் நஸீர் போன்றோர் உரை நிகழ்த்தியதுடன் கட்சியின் வட்டார அமைப்பாளர் சகோதரர் முஸ்தாக் அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் ஏனைய வேட்பாளர்கள்,பெருந்திரளான ஊர் மக்கள் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தததோடு பட்டாசுகள் வான வேடிக்கைகள் மல்வெடிகள் மூலம் இக்கூட்டம் மேலும் அழங்காரம் பெற்றதை காண முடிந்தது .









(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்- கஹட்டோவிட்ட)