காட்டுத் தீ பரவல்; இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்
இஸ்ரேலின் காட்டுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய தீ காரணமாக அந்த நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச உதவியையும் இஸ்ரேல் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தீ விபத்து ஏற்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து ஓரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை 13 பேர் அளவில் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் விமானப் படை, தீயணைப்பு வீரர்கள்,ஏனைய படையினர் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.