உள்நாடு

ஆச்சர்யமிக்க நகராக பேருவளையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தியை ஆதரியுங்கள்..! அரூன் அஸாத் வேண்டுகோள்..!

தென்னிலங்கையில் ஆச்சரியமிக்க நகராக பேருவளையை மாற்றியமைக்க வேண்டுமானால் நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அரூஸ் அஸாத் தெரிவித்தார்.
பேருவளை நகரசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கன்கானங்கொடை மற்றும் பிட்டவலை பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நுகர சபை தலைமை வேட்பாளர் மபாஸிம் அஸாஹிர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரூஸ் அஸாத் மேலும் கூறியதாவது
போய்வாக்குறுதிகளை கூறி பொய் சத்தியமும் செய்து ஒரு பிரிவினர் மக்களின் வாக்குகளைப் பெற்று மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இன்னொரு கூட்டம் நீதியானஇ தூய்மையான ஆட்சியை மேற்கொள்வோம் என்று பேருவளை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பச்சை பச்சையாகவே ஊழல்இ லஞ்சம்இ அதிகார துச்பிரயோகம் மூலம் கீழ்த்தரமான அரசியலைச் செய்தனர். முகவர்கள் மூலம் வாக்குகளை காசு கொடுத்து வாங்கும் அரசியலும் இப்பகுதியில் காணப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியானது பேருவளை நகர சபையின் நிர்வாகத்தை இம்முறை நிச்சயமாகவே கைப்பற்றும். நாட்டு மக்கள் ஆட்சியைஇ ஜனாதிபதியை மாற்றியது போல் உள்ளுராட்சி சபைகளினது ஆட்சியையும் மாற்ற வேண்டி இன்று தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளனர். தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை நான் பேருவளை நகரசபைக்கு பெற்றுக்கொடுப்பேன். பேருவளை அபிவிருத்திக் குழு தலைவர் சந்திம ஹெட்டியாரச்சியின் பங்களிப்பும் முழுமையாக கிடைக்கும்.
எனவே பேருவளை மக்கள் தமது பகுதியின் அபிவிருத்தியை முன்னேற்றத்தை மீண்டும் ஒரு முறை பாழ்படுத்தி விடாது ஆளும் கட்சிக்கு வாக்களித்து அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முயல வேண்டும்.
பேருவளையை தென்னிலங்கையில் ஆச்சரியமிக்க முன்னேற்றம் கண்டஇ அழகான பிரதேசமாக ஊழல்இ இழஞ்சம் இல்லாத தூய்மையான நகர சபையாக மாற்றியமைப்போம்.
நாம் மக்கள் பணிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய சிறந் வேட்பாளர் குழுவை களமிறக்கியுள்ளோம். இவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு வாக்குகளை பயன்படுத்துங்கள். வத்திமராஜபுர கால்வாய் புனரமைப்புஇ குப்பை கூளங்களை முறையாக அகற்றுவது உட்பட முக்கிய பிரச்சினைகளை நாம் தீர்த்து வைப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *