உள்நாடு

விமர்சையாக நடைபெற்ற கலாபூஷணம் ஜின்னாவின் நூல் வெளியீட்டு விழா

கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா எழுதிய “இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பாரம்பரியம்” நூல் வெளியீட்டு விழா கொழும்பு 7 இல் அமைந்துள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீலங்கா இஸ்லாமியக் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், மன்றத் தலைவர் தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் பேராசிரியர் உதித கயாசான் குணசேகர கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு நிகழ்வு

நிகழ்வின் சிறப்பான தருணமாக, தொழிலதிபர் அல்ஹாஜ் டப்.எம்.எம்.எஸ்.எம். கமால்தீன் 5 இலட்சம் ரூபா செலுத்தி நூலின் முதலாவது பிரதியைப் பெற்றுக்கொண்டார். இது விழாவின் பேசுபொருளாக அமைந்தது.

நிகழ்வின் சிறப்பு உரைகள்

“இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, இங்கு ஒலிக்கின்ற ஒவ்வொரு சுருதியிலும் பாரம்பரியத்தின் ஒலியாக உள்ளது.”—பேராசிரியர் உதித கயாசான் குணசேகர

இந்த நூல், நமது சமூகம் எதிர்கொள்ளும் மரபுத் தொடர்ச்சியின் ஒரு முக்கிய ஆவணமாகும்.”— பீ.எச். அப்துல் ஹமீட்

“முஸ்லிம் சேவையின் வரலாற்றை எழுத்துக்களில் புதைத்து உலகிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாவுக்கு வாழ்த்துகள்.”- பண்ணிப்பாளர் – எம்.ஜே. பாத்திமா ரினூஸியா

விழாவில் பங்கேற்ற முக்கிய ஆளுமைகள்: –

உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீட்,முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினூஸியா,முன்னாள் பணிப்பாளர் ஹாபிஸ் எஸ்.எம். ஹனிபா,தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர்,தென்கிழக்கு பல்கலைக்கழக முதன்மைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், குர்ஆன் ஆய்வாளர் டாக்டர் அமீர் அல்தாப்.ஐ,டி.என் லக்ஹன்ட வானொலி பிரதிப் பொது முகாமையாளர் அசோக கருணாரத்னச,மூக, ஊடகத் துறையை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் அம்சங்கள்:

கிராஅத் ஓதினார் – ராஹினா இர்ஷாத்மொழிபெயர்ப்பு -ராஹித் அஹமத் இர்ஷாத்

அறிமுக உரை: கவிஞர் என். நஜ்முல் ஹுசைன்,நூல் விமர்சனம்: டாக்டர் எம். ரஸ்மின்,வாழ்த்துக் கவிதை: சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் ஆகியோரது நிகழ்ச்சிகள் அமைந்தன.

கௌரவிப்புகள்:-

முன்னாள் பணிப்பாளர் ஹாபிஸ் எஸ்.எம். ஹனிபா மற்றும் தற்போதைய பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினூசியா ஆகியோர், ஸ்ரீலங்கா இஸ்லாமியக் கலை இலக்கிய மன்றத்தால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நூலாசிரியர் எம்.எஸ்.எம். ஜின்னாவும் இலங்கை வானொலியின் சார்பில் நினைவுச் சின்னத்துடன் கௌரவிக்கப்பட்டார்.

விழா நிறைவு:

நன்றியுரை பாத்திமா ருசைக்கா ஜின்னா இர்ஷாத் வழங்கினார். நிகழ்வினை அஹமத் எம். நஸீர், ஏ.எம். முஹம்மட் ரலீம் மற்றும் சாமில் அலி அக்பர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

(முஹம்மத் நஸார்- கொழும்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *